
சீனாவின் கணிணி பற்றிய ஆய்வு மற்றும் வளர்ச்சி பணி 1950ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் துவங்கியது. 1958ஆம் ஆண்டில் ஒரு சிறிய ரக மின்னணுக் குழாய் கணிணியையும் 1959ஆம் ஆண்டில் ஒரு பெரிய ரக மின்னணுக் குழாய் கணிணியையும் சீனா ஆராய்ந்து உற்பத்தி செய்தது. சிறிய ரக கணிணி வினாடிக்கு ஆயிரத்து 500 முறை கணக்கிடப்படுகின்றது. பெரிய ரக கணிணி, வினாடிக்கு பத்தாயிரம் முறை கணக்கிடப்படுகின்றது. 60 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், ட்ரான்சிஸ்டர் கணிணியை வெற்றிகரமாக ஆராய்ந்து உற்பத்தி செய்த பின், ஒருங்கிணை மின் சுற்ற நெறி கணிணி பற்றிய ஆய்வு பணியை சீனா துவங்கியது.

70ஆம் ஆண்டுகளில் ஒருங்கணை மின் சுற்று நெறி தகடுடன் கூடிய சிறிய ரக கணிணியை சீனா பெரும் அளவில் உற்பத்தி செய்ய துவங்கியது. 1980ஆம் ஆண்டுகளில் நுழைந்த பின், பெரிய ரக கணிணி, குறிப்பாக மாபெரும் கணிணி பற்றிய தொழில் நுட்பத்தில் சீனா முக்கிய முன்னேற்றம் கண்டது. 1984ஆம் ஆண்டு, வினாடிக்கு பத்து கோடி முறை கணக்கிடக் கூடிய இந்ஹோ1 எனும் மாபெரும் கணிணியை உருவாக்குவதில் சீனா வெற்றி பெற்றது. 2000ஆம் ஆண்டு, வினாடிக்கு 38 ஆயிரம் கோடி முறை கணக்கிடக் கூடிய சென்வே 1 எனும் உயர் திறனுடைய கணிணியை சீனா தானாகவே வெற்றிகரமாக தயாரித்தது. அதன் முக்கிய தொழில் நுட்ப குறியிலக்கும் திறனும், உலகின் முன்னேறிய நிலையை எட்டியது. இதனால், அமெரிக்கா ஜப்பான் ஆகியவற்றை அடுத்து, இத்தகைய உயர் திரனுடைய கணிணியை உற்பத்தி செய்யக் கூடிய மூன்றாவது நாடாக சீனா மாறியது.
1 2
|