• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-13 09:29:09    
சீனாவின் கணிணித் துறை

cri

கணிணி பற்றிய ஆய்வு பணி மற்றும் வளர்ச்சி நிலையின் இடைவிடா மேம்பாட்டுடன், சீனாவின் கணிணித் துறை, பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது, சீனாவில் கணிணி தயாரிப்பு, அதன் உதிரிப் பகுதிகளின் உற்பத்தி மென் பொருள், அதற்கான சேவைத் துறை முதலியன உள்ளிட்ட ஒட்டீட்டளவில் முழுமையான ஒரு அமைப்புமுறை உருவாகியுள்ளது. அதே வேளையில், கணிணியை உற்பத்தி செய்யும் சில பெரிய தொழில் நிறுவனங்கள் படிப்படியாக உருவெடுத்துள்ளன. அவற்றில், LENOVO, FUNDWE, GREAT WALL முதலிய பெரிய கணிணி உற்பத்தி தொழில் நிறுவனங்களின் ஆண்டு உற்பத்தி அளவு, ஒரு லட்சத்துக்கு மேலாகும். தற்போது உள்நாட்டுச் சந்தையில், 80 விழுக்காட்டுக்கு மேலான கணிணிகள் சீனாவிலே உற்பத்தி செய்யப்பட்டவை. கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் கணிணி சந்தை, தொடர்ச்சியாக பெருகி வருகின்றது.

இப்பொழுது, பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. கணிணி தரத்தின் உயர்வு, விலைவாசியின் இறக்கம் ஆகியவற்றுடன், கணிணிகள் மிகவும் விரைவாக சாதாரன குடும்பங்களில் பரவலாக நுழைந்துள்ள. இணையப் பயன்பாடும், சீனாவிலும் பரவிவருகின்றது. சீனாவின் இன்டர் இணையத் துறை தீவிரமாக வளர்ச்சியடைகின்றது. கணிணியின் பரவல், இன்டர் இணையத் துறையின் வளர்ச்சி ஆகியவை, சீனாவின் மென் பொருள் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளன. தற்போது, சீனாவில், ஆயிரத்து 500க்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள், மென்பொருள் வளர்ச்சி, ஆராய்ச்சி உற்பத்தி விற்பனை பழுதுபார்ப்பு, சேவை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளன.

அவற்றில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மென்பொருள் தொழில் நுட்ப வல்லுநர்கள் பணிபுரிகிறார்கள். துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில், பெய்சிங், ஷாங்கை, சென்சென், சென்யாங் உள்ளிட்ட பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ள, மென்பொருள் வல்லுநர்கள் குவிந்திருக்கும் பிரதேசங்களில் அடுத்தடுத்து, பத்துக்கும் அதிகமான மென்பொருள் பூங்காக்களை சீனா நிறுவியுள்ளது. அவற்றில், பெய்சிங்கிலுள்ள சுங் குவான்சுன் அறிவியல் தொழில் நுட்ப பூங்கா மிகவும் புகழ் பெற்றது. அதன் மென்பொருள் துறையின் ஆண்டு விற்பனைத் தொகை, முழு நாட்டின் மொத்த விற்பனை தொகையில் 43 விழுக்காடு வகிக்கின்றது.


1  2