அண்மையில் பெய்ஜிங்கில் அரங்கேற்றப்பட்ட மெய் லான் பாங் எனும் இசை நாடகம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இன்றைய சீனாவின் புகழ்பெற்ற ஆற்றல் மிக்க பீகிங் இசை நாடக கலைஞர்கள் ஒன்று தேர்ந்து நடித்துள்ளனர். சௌ பௌ சியூ இவர்களில் ஒருவராவார்.
இந்நாடகத்தில் அவர் புகழ்பெற்ற பீகிங் இசை நாடக கலைஞரான மெய் லான் பாங்கின் மாமியராக நடித்தார். கணீரென்ற குரல், ஆர்வமிகுந்த உற்சாகம், நுணுக்கமான நடிப்பு நுட்பம் ஆகியவற்றுடன், அன்பான தாய் மையும் நியாய உணர்வும் கொண்ட முதிய பெண்ணாக நடித்தார். இதனைக் கண்டு மகிழ்ந்த ரசிகர்கள் அவரை வெகுவாக புகழ்ந்து போற்றினர்.
பீகிங் இசை நாடகமானது, சீனாவின் தேசிய இசை நாடகமாகும். இசை நாடகத்திலுள்ள கதா பாத்திரங்கள் பால், வயது, தகுநிலை, குணம் ஆகியவற்றுக்கிணங்க, வெவ்வேறான கதா பாத்திரங்கள் என வகைப்படும். இது "ஹாங் தாங்" எனப்படுகிறது. பீகிங் இசை நாடக கலைஞர் பொதுவாக ஒரு குறிப்பிட்ட ஹாங் தாங்கில் நடிப்பர். சௌ பௌ சியூ நடுத்தர வயதுடைய மற்றும் முதுமை பெண்மணி பாத்திரம் ஏற்று நடிக்கிறார். இவ்வகை கதா பாத்திரம், "லாவ் தான்" எனும் முதுமை பெண் பாத்திரம் என அழைக்கப்படுகிறது. இது பீகிங் இசை நாடகத்தில் பொதுவாக துணை கதா பாத்திரமாக இருக்கின்றது. சௌ பௌ சியூ, முதுமை பெண் கதா பாத்திரத்தை கதா நாயகியாகக் கொள்ளும் பல பீகிங் இசை நாடகங்களை மாற்றி அமைத்து புகழ் பெறலானார். மெய் மலர் எனும் சீன இசை நாடக வட்டாரத்தின் அதியுயர் விருதை அவர் பெற்றார். இது பற்றி அவர் கூறியதாவது—
"மேடையில் தலைசிறந்து விளங்க வேண்டுமானால் எங்கள் முதிய ஆசிரியர் கூறியது போல் சிரமப்பட்டு பயில வேண்டும். எங்கள் கலையானது, ஒரு வகை சேமிப்பு கலையாகும். தரையில் கால் ஊன்றும் முறையில் செயல்பட வேண்டும்" என்றார் அவர்.
1 2
|