• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-14 10:40:51    
பீகிங் இசை நாடக கலைஞர் சௌ பௌ சியூ

cri

56 வயதான சௌ பௌ சியூ, பெய்ஜிங்கில் ஒரு அறிவாளர் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய பெற்றோர் பீகிங் இசை நாடகத்தை மிகுதியும் விரும்புகின்றனர். சிறுவயதிலிருந்தே அவருடைய தந்தை பீகிங் இசை நாடகம் பாடும் முறை அவருடைய மனதில் ஆழப்பதிந்துள்ளது. மேலும் அவர் அடிக்கடி தன் தாயாருடன் சேர்ந்து நாடக அரங்கிற்குச் சென்று பீகிங் இசை நாடகம் கண்டு மகிழ்வார். அரங்கில் நடிக்கப்பட்ட எழில்மிக்க அழகிகளை அவர் மிகவும் விரும்பினார். வீடு திரும்பியதும் அவர்களை போல ஆடிப்பாடுவார். 11வது வயதில் அவர் பெய்ஜிங் இசை நாடக பள்ளியின் நுழைவு தேர்வில் வெற்றி பெற்று பீகிங் இசை நாடகம் கற்கத் துவங்கினார். முதிய பெண் பாத்திரமாக நடிக்க வேண்டும் என அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை அவர் எதிர்பார்க்கவே இல்லை. அப்போது அவர் அழுதார். ஆனால், அவருடைய குரல் வளம் முதிய பெண்மணிக்கு ஏற்றது. ஆசிரியர் சொன்ன படி அவர் ஓராண்டு பயின்றார். அவர் கூறியதாவது—

"முதுமை பெண் பாத்திரம் எவ்வாறு என்னைக் கவர்கிறது தெரியுமா? இரண்டாவது ஆண்டு வகுப்பில் பயின்ற போது யெவெய்யின் தாய் தன் மகனின் முதுகில் எழுத்துக்களைப் பொறிப்பது என்ற நாடகத்தில் நான் யெவெய்யின் தாயாகாக நடித்தேன். முதலில் என் வேடம் தலை சிறந்தது. நான் முதலில் இசை இல்லா ஒரு பாடலை பாடினேன். பாடி முடிப்பதற்குள் கரகோஷம் எழுந்தது. அப்போது நான் மகிழ்ந்தேன். அன்று முதல் இதை விரும்பலானேன்" என்றார் அவர்.

ஆனால் கலை பாதையில் எப்போதும் கரகோஷம் என்று கூற முடியாது. சௌ பௌ சியூவின் கலை வாழ்வு மிகவும் கடினமானது. பீகிங் இசை நாடகத்தில் குழந்தைப் பருவ பயிற்சி அதி முக்கியம். அதாவது சிறு வயதிலிருந்தே சிரமப்பட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும். பாடல், படிப்பு, ஒத்திக்கை, சண்டையிடுதல், நடனம் ஆகியவற்றைக் கற்க வேண்டும். 13வது வயதில் அவர் கடும் நோய்வாய்பட்டு, மிகவும் பலவீனம் அடைந்த போதிலும், தொடர்ந்து இதைப் பயின்று வந்தார். 19வது வயதான போது அவர் தம் படிப்பை முடித்துக் கொண்டார். அப்போது சீனாவில் கூறப்படும் பண்பாட்டுப் புரட்சி நடைபெற்றது. நாட்டின் இதர மாணவர்கள் போல கிராமப்புறங்களுக்குச் சென்று உழைத்தார். தொடர்ந்து 10 ஆண்டுகளாக அவர் பீகிங் இசை நாடகத்தை அரங்கேற்றவே இல்லை. இருந்தாலும் அவர் தன் அடிப்படை பயிற்சியை கைவிடவில்லை.

70ஆம் ஆண்டுகளின் இறுதியில் சௌ பௌ சியூ பீகிங் இசை நாடக அரங்கிற்குத் திரும்பினார். நடிப்பு, கலையை மீட்டு உயர்த்தும் பொருட்டு, அவர் புகழ்பெற்ற முதுமை பெண் நடிகர் லி ஜின் சுவானிடமிருந்து பயிலலானார். அத்துடன், அனுபவமிக்க முதியோரின் உதவியுடன் "லி குய் தாயாரைச் சென்று பார்ப்பது" என்ற புகழ்பெற்ற பீகிங் இசை நாடக பகுதியை தழுவிப் படைத்தார். இது அவருடைய முதலாவது படைப்பு ஆகும். அவர் கூறியதாவது—

"இந்நாடக பகுதியை நானே தழுவிப் படைத்தேன். ஏனெனில் பாடல், ஒத்திக்கை ஆகியவை படைத்த பீகிங் இசை நாடகத்தை நான் விரும்புகிறேன். அப்போது முதுமை பெண் பாத்திரமானது பாடலை முக்கியமாகவும் செய்துகாட்டலை துணையாகவும் கொண்டது. ஆனால் என்னைப் பொறுத்த வரையில், நான் இது போன்ற நாடகத்தை மேலும் விரும்புகிறேன்" என்றார் அவர்.

80ஆம் ஆண்டுகள் முதல் சௌ பௌ சியூ, பல முறை ஆஸ்திரேலியா ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் சீனாவின் ஹாங்காங் தைவான் பிரதேசங்களுக்கும் சென்று அரங்கேற்றினார். ரசிகர்களின் பெரும் பாராட்டைப் பெற்றார். கலைக்கு தேசிய எல்லை கிடையாது. மக்களின் பரிமாற்றத்தை முன்னேற்றுவிக்கும் போது, அதற்கு மொழி தடை கிடையாது என்று அவர் கருதுகிறார்.


1  2