 சீனத் தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை சீனாவில் கொள்வனவு பற்றி பிரச்சாரம் செய்யும் கூட்டம் ஐ.நாவின் தொடர்புடைய வாரியங்கள் நடத்துவது சாதாரண நடவடிக்கையாகும். ஆனால் அக்டோபர் திங்கள் 26ம் நாள் ஐ.நா குழந்தை நிதியத்தின் பணியகங்களின் பொறுப்பாளர்கள் அனைவரும் பெய்சிங்கில் பிரச்சாரம் செய்வது என்பது அதிர்ச்சியூட்டும் விஷயமாகும். ஒரு திங்கள் காலத்தில் அவர்கள் பெய்சிங், ஷாங்காய், ஹாஞ்சோ, டியென்சின், குவெய் லின், சந்து லேன் சோ ஆகிய இடங்களில் மருந்து தயாரிப்பு, பண்பாட்டு மற்றும் கல்வி பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பு தொழில் நிறுவனங்களைப் பார்வையிடுவர். அத்துடன் நேரடியாக ஐ.நாவுக்கு பொருட்களை விற்பனை செய்யுமாறு அவர்கள் சீன தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பர்.
மருந்து அவற்றில் முக்கிய பொருளாகும்.
நோய் தடைகாப்பு மருந்து முதலுதவி மருந்து, உயிரின ஆக்க பொருள், பண்பாட்டு மற்றும் கல்வி பயன்பாட்டு பொருட்கள், விளையாட்டு சாதனங்கள் ஆகியவற்றை ஐ.நா குழந்தை நிதியம் சீனாவிலிருந்து வாங்க திட்டமிட்டுள்ளதை நிதியத்தின் கொள்வனவு பகுதித் தலைவர் எரன் கொட் தெரிவித்துள்ளார். இவற்றில் நோய் தடைகாப்பு மருந்து மாபெரும் அளவில் வகிக்கின்றது. இது மொத்த கொள்வனவு தொகையில் 50 விழுக்காட்டைத் தாண்டும் என்று தெரியவருகின்றது.
தவிர சீனா தயாரித்த மலேரியா நோய் தடுப்பு மருந்து எய்ட்ஸ் தடுப்பு மருந்து ஆகியவற்றில் கொள்வனவு அதிகாரிகள் காட்டிய மாபெரும் ஆர்வம் சீனத் தொழில் நிறுவனங்களின் அக்கறையை ஈர்த்துள்ளது.
ஐ.நா குழந்தை நிதியமானது ஐ.நாவின் கொள்வனவு துறையில் ஒரு பகுதியாகும். அடிப்படை உடல் நல காப்பு , சத்து, அடிப்படை கல்வி, பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றைக் கொண்டு வளரும் நாடுகளின் குழந்தைகளுக்கு இது உதவி அளிக்கின்றது.
1 2
|