ஆண்டு தோறும் அந்நாடுகளின் 40 விழுக்காட்டு குழந்தைகளுக்கு நோய் தடைக்காப்பு மருந்து வழங்கும். கடந்த ஆண்டில் உலக ரீதியில் கொள்வனவுக்கென செலவிட்ட பணத் தொகை 70 கோடி அமெரிக்க டாலரை தாண்டியது. இது ஐ.நாவின் மொத்த கொள்வனவு தொகையில் 13.95 விழுக்காட்டை வகிக்கின்றது. ஆனால் சீனாவிலிருந்து நேரடியாக கொள்வனவு செய்த தொகை 62 லட்சம் அமெரிக்க டாலராகும். ஐ.நா குழந்தை நிதியம் கொள்வனவு செய்த வணிக பொருட்களில் சில பகுதி சீனாவால் தயாரிக்கப்பட்டது. ஆனால் இவை தைமார்க், ஜப்பான், கெனியா பிரிட்டன் முதலிய நாடுகளின் வணிகரிடமிருந்து வாங்கப்பட்டன. சீனத் தொழில் நிறுவனங்களுக்கும் நிதியத்துக்குமிடையில் நீண்டகால விநியோக ஒத்துழைப்புறவு இல்லை. இப்போது உலக அளவில் கொள்வனவு செய்யும் சக்தி சீனாவை மையமாக கொண்டு வருகின்றது.
ஐ,நாவை சேர்ந்த கொள்வனவு அலுவல் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படலாம். முதலாவது பகுதியானது நியுயார்க்கில் அமைந்துள்ள ஐ.நாவின் தலைமையகத்தின் கொள்வனவு பகுதியாகும். இரண்டாவது பகுதி ஐ.நா செயலாளர் பணியகத்தைச் சேர்ந்த வாரியங்கள் மற்றும் ஐ.நாவின் சிறப்பு வாரியங்களாகும். தத்தமது கொள்வனவு கொள்கைகளின் படி அவை கொள்வனவு செய்கின்றன. குழந்தை நிதியத்தின் கொள்வனவு பகுதி அதை போன்ற வாரியங்களில் ஒன்றாகும்.
சீனாவின் மிக பல தொழில் நிறுவனங்கள் ஐ.நாவின் கொள்வனவு விதி ஒழுங்கு ஆகியவற்றை நன்றாக அறிந்து கொள்ளாதது என்பது ஐ.நா சீனாவிலிருந்து குறைவாக கொள்வனவு செய்வதன் முக்கிய காரணமாகும். இது பற்றி அமெரிக்க சீன வணிக விவகார மையத்தின் தலைமை இயக்குனரும் சீனாவுக்கான அமெரிக்க வணிக சங்கத்தின் துணை பொதுச் செயலாளருமான யோ தின் கான் செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார். ஐ.நா அதன் பல தகவலை இணையத்தின் மூலம் வெளியிட்டுள்ளது. உள் நாட்டில் பல தொழில் நிறுவனங்கள் இணையத்தில் ஏற மாட்டா. இணையத்தில் அலுவல் பற்றி கவனம் செலுத்துவதற்கு பொறுப்பான சிறப்பு திறமைசாலிகளை நியமிப்பதும் இல்லை. ஈமேல், கடிதம் ஆகியவற்றுக்கு உடனடியாக பதில் அளிப்பது குறைவு. ஆகவே வணிக வாய்ப்பை சீனா இழந்து விட்டது. தவிர, பொதுவாக ஐ.நா கொள்வனவு செய்யும் தொகை 25 ஆயிரம் அமெரிக்க டாலரிலிருந்து ஒரு லட்சம் அமெரிக்க டாலர் மட்டுமே சீனத் தொழில் நிறுவனங்கள் பொதுவாக இதை சிறியது என கருதி இதில் ஈடுபட உற்சாகம் அவற்றுக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார்.
 
இதுவரை சீனாவில் பதிவு செய்துள்ள தொழில் நிறுவனங்களில் செய்தொழில் நிறுவனங்கள் அதிகம். சேவை புரியும் தொழில் நிறுவனங்கள் எடுத்துக்காடாக போக்குவரத்து சேவை நிறுவனம் குறைவு என்று ஐ.நாவின் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார். எடுத்துக்காட்டாக அண்மையில் சீன அமைதிகாப்பு படை ஹைட்க்கு கடமை நிறைவேற்றுவது பற்றி ஏலம் வெளியிடப்பட்ட பின் சீன விமான சேவை நிறுவனம் கொள்வனவு விநியோக வணிகராக பதிவு செய்ய வில்லை. ரஷியாவின் ஒரு நிறுவனம் இந்த வாய்ப்பை பெற்றது. உண்மையில் சீன விமான சேவை நிறுவனத்துக்குத் தெளிவான நிலவியல் மற்றும் செலவு மேம்பாடு உண்டு. இதன் மூலம் சீன தொழில் நிறுவனம் சேவைபுரியும் உணர்வு வலிமைமிக்கதல்ல என்றார் அந்த அதிகாரி.
ஐ,நாவின் கொள்வனவு வாரியங்கள் பல இடங்களில் கிடந்து அமைந்துள்ளன. அவற்றுக்கிடையிலான தொடர்பை அதிகரிக்கும் வகையில் ஐ.நா ஒருங்கிணைந்த தகவல் மேடை அதாவது www。ungm。org எனும் உலக கூட்டு சந்தை என்ற பெயரை ஐ.நா படிப்படியாக பயன்படுத்தும். வணிகர் தகுதியை பெறுவதில் ஆர்வம் கொண்ட தொழில் நிறுவனங்கள் ஒருங்கிணைந்த முறையில் இந்த இணையத்தின் மூலம் விண்ணப்பம் செய்து பல்வகை தகவலை கண்டுபிடிக்கலாம். இப்படி செயல்படுவது என்பது தொழில் நிறுவனங்களுக்கு நல்ல வசதி வழங்கும். எடுத்துக்காட்டாக மருத்துவ மற்றும் மருந்து தயாரிப்பு தொழில் நிறுவனம் இணையத்தின் மூலம் பதிவு செய்தால் போதும். ஐ.நா செயலாளர் பணியகத்தின் கொள்வனவு பகுதி ஐ.நா குழந்தை நிதியத்தின் கொள்வனவு பகுதி, ஐ.நா அகதி விவகார பணியகத்தின் கொள்வனவு பகுதி முதலிய வாரியங்களில் பதிவு செய்வது தேவையில்லை.
நேயர்களே இந்த தகவலை கேட்ட பின் தங்களுக்கிடையில் யாராவது தொழில் நிறுவனத்தில் வேலை செய்தால் இந்த தகவல் பயன்படுத்தலாம் என்று விரும்புகின்றேன். 1 2
|