• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-16 15:09:54    
திபெத்திலான கட்டாய கல்வித் துறை

cri

துவாயன்தெச்சி பயில்கின்ற பள்ளியில் பல்வகை பாடங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆசிரியர்களில் பெரும்பாலானோர் உள்ளூரில் வாழ்கின்ற திபெத்தின மொழி ஆசிரியராவர். திபெத் மொழியில் அவர்கள் பாடம் சொல்லி தருகின்றனர். அனைத்து பாடங்களில் கணிணி , ஹென் இன மொழி மற்றும் ஆங்கில மொழி பாடங்கள் அவளுக்கு மிக பிரியம். இப்போது திபெதில் சுற்றுலா பயணம் மேற்கொள்கின்ற வெளிநாட்டு பயணிகளுடன் ஆங்கிலத்தில் எளிதாக உரையாட சுலான்தெச்சியால் முடியும். பல்கலைக்கழகத்தில் நுழைந்து படிப்பது என்பது அவளுடைய விருப்பமாகும். 

தற்போது எங்களுக்கு படிக்கும் வசதி சீராகின்றது. கணிணி, ஆங்கிலம் ஹென் இன மொழி ஆகியவற்றை கற்றுக் கொள்ள முடியும். நான் மேலும் பல்கலைக்கழகத்தில் கல்வி பெற வேண்டும் என்றார் அவள்.

இப்போது திபெத்தின் கல்வித் துறை வேகத்துடன் வளர்ந்து வருகின்றது. கல்வி பெறும் மக்கள் தொகை பெரிதும் அதிகரித்துள்ளது. இது வரை தன்னாட்சி பிரதேசத்தில் பல்வகை கல்வி நிலையங்களின் எண்ணிக்கை 1000க்கும் அதிகமாகும். பள்ளிக்கு செல்ல வேண்டிய குழந்தைகள் கல்வி பெறும் விகிதாசாரம் 87 விழுக்காட்டைத் தாண்டியது.

லாசா நகரில் கல்வி மற்றும் விளையாட்டு ஆணையகத்தின் அதிகாரி சியா யுன்சாண்டின் 30க்கும் அதிகமான ஆண்டுகளாக கல்வித் துறையில் பணி புரிந்தவராவார். திபெத் கல்வியின் வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுகையில் அவர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார். திபெத் கல்வியின் வளர்ச்சியை நானே கண்டுள்ளேன். தற்போதைய திபெத் கல்வித் துறையின் அளவு சில பத்து ஆண்டுகளுக்கு முன்பே சிந்திக்கவே முடியாததாகும். 

திபெத் கல்வித் துறையானது இல்லாத நிலையிலிருந்து வளர்ந்து வருகின்றது. சிறியதிலிருந்து பெரியதாகவும் வளர்ந்து வருகின்றது. ஜனநாய சீர்திருத்தத்துக்கு முன் திபெதிற்கு நவீன முக்கியத்துவம் வாய்ந்த கல்வி அடிப்படையில் காணப்பட வில்லை. 1952ம் ஆண்டில் நடுவண் அரசால் லாசாவில் முதலாவது துவக்க பள்ளியான லாசா நகரின் முதலாவது துவக்க பள்ளி நிறுவப்பட்டது. 2004ம் ஆண்டு அக்டோபர் திங்கள் லாசா நகரில் 9 ஆண்டு கால கட்டாய கல்வி முறை அடிப்படையில் பரவலாகியுள்ளது. இளைஞர்களிடையில் எழுதப் படிக்க தெரியாத நிலை அடிப்படையில் நீக்கப்பட்டது என்றார் அவர்.

கடந்த 10 ஆண்டுகளாக அரசு திபெதிற்கு ஒதுக்கி வைத்த கல்விக்கான சிறப்பு தொகை 40 கோடி யுவானைத் தாண்டியது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் இடைநிலை மற்றும் துவக்க பள்ளிகளின் வகுப்பறைகளையும் கட்டியமைத்து விரிவாக்குவதிலும், துணைக்கோளை பயன்படுத்தி தொலைக்காட்சி வழி கல்வி வழங்கும் நிலையத்தை நிறுவுவதிலும் இந்த தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் திபெத் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர் நிலை கல்வி நிலையங்களின் அடிப்படை வசதி கட்டுமானமும் பல்கலைக்கழகத்திலான இணைய கட்டுமானமும் இத்தொகை மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பெரும் தொகையான ஆசிரியர்களும் நிர்வாகிகளும் திபெதிற்கென பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர் என்று காயுசாண்டின் அறிமுகப்படுத்தினார்.

தவிர, சீனாவின் மற்ற மாநிலங்களும் திபெத்தின் கல்வித் துறைக்கு உற்சாகத்துடன் ஆதரவையும் உதவியையும் வழங்கியுள்ளன. இதுவரை சீனாவின் பல்வேறு இடங்கள் திபெத்தின் கல்விக்கு உதவியாக வழங்கிய தொகை 20 கோடி யுவானை தாண்டியது. 2010ம் ஆண்டில் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் 9 ஆண்டு கால கட்டாய கல்வி முறை அடிப்படையில் நனவாக்கப்படும். அதேவேளையில் இளைஞர்களிடையில் எழுத படிக்க தெரியாத நிலைமை நீக்கப்படும் என்று தெரியவருகின்றது.


1  2