• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-20 15:56:26    
கடந்த வாரத்தில் உலகில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள்

cri

சர்வதேச மேசைப் பந்து சம்மேளனத்தின் 2004ஆம் ஆண்டு தொழில் முறை சுற்றுவட்ட ஒட்டுமொத்த இறுதிப் போட்டி 12ந் நாள் பெய்சிங்கில் நிறைவடைந்தது. சீன விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் நான்கு போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடவருக்கான ஒற்றையர் போட்டியில் சீன வீரர் வாங் லி சின் 4-1 என்ற ஆட்டக்கணக்கில் தமது அணி தோழரான மாலின்னைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிருக்கான ஒற்றையர் போட்டியில் 16வயதான சீன வீராங்கனை கோ யே 4-2 என்ற ஆட்டக்கணக்கில் சீனாவின் மற்றொரு வீராங்கனை நியூ ச்சியன் பெங்கை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆடவருக்கான இரட்டையர் போட்டியில், சீன வீரர்கள் மாலின், சென்சி ஜோடி 4-3 என்ற ஆட்டக் கணக்கில் சீனாவின் மற்றொரு ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றனர். மகளிருக்கான இரட்டையர் போட்டியில் சீன வீராங்கனைகள் வாங் நான், சாங் யி நிங் ஜோடி சீனாவின் மற்றொரு ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றனர்.

பனிச் சறுக்கல் 2004-2005 உலகக் கோப்பைக்கான விரைவுப் பனிச்சறுக்கல் போட்டியின் இரண்டாம் போட்டியில் டிசம்பர் 11, 12 நாட்களில் சீனாவின் ஹார்பின் நகரில் நடந்தது. மகளிருக்கான 500 மீட்டர் பனிச்சறுக்கல் போட்டியில் சீன வீராங்கனை வாங் மன் லி 38.73, 38.71 என்ற சாதனைகளுடன் இரண்டு முறை சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிருக்கான 100 மீட்டர் போட்டியில் அவர் தென் கொரிய வீராங்கனையுடன் இணைந்து முதலிடம் பெற்றார்.

சர்வதேச நீர் குதிப்பு சாம்பியன் பட்டப் போட்டி 12ந் நாள் குவாங்சோவில் நிறைவடைந்தது. சீன வீரர் வீராங்கனைகள் மொத்தம் 8 தங்கப் பதக்கங்களை பெற்றனர். மகளிருக்கான ஒற்றையர் பத்து மீட்டர் மேடை நீர் குதிப்பில், சென் நி சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிருக்கான இரட்டையர் பத்து மீட்டர் மேடை நீர் குதிப்பில் சென் நி, ஜாதொங் ஜோடி 88.74 புள்ளி பெற்று முதலிடம் பெற்றனர். ஆடவருக்கான 3 மீட்டர் பலகை நீர் குதிப்பில் சீன வீரர்களான லோ யு தொங், வூ சுவய் ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றனர். கடைசியில் நடைபெற்ற ஆடவருக்கான 3 மீட்டர் ஒற்றையர் பலகை நீர் குதிப்பு போட்டியில் சீன வீரர் சென் சியா மிங் 85.68 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார்.

1  2