• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-20 15:56:26    
கடந்த வாரத்தில் உலகில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள்

cri

சீனாவின் தாங்சான் நகரில் நடைபெற்ற 2004ஆம் ஆண்டுக்கான தேசிய நீச்சல் சாம்பியன் பட்டப் போட்டியின் மகளிருக்கான 50 மீட்டர் தவளைப் பாணி நீச்சலில் வீராங்கனை லோ சுயே சுவான் 31.61 வினாடி என்ற சாதனையுடன் சாம்பியன் பட்டம் பெற்றார். ஆடவருக்கான 50 மீட்டர் முதுகுப்புறப் பாணி நீச்சலில் வீரர் ஓயாங் குன் பொங்25.98 வினாடியில் தூரத்தை நீந்தி முடித்து, சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவருக்கான 1500 மீட்டர் சுதந்திர பாணி நீச்சல் போட்டியில் வீரர் ஜி சி சியாங் 15 நிமிடம் 24.18 வினாடி என்ற சாதனையுடன் முதலிடம் பெற்றார். மகளிருக்கான 200 மீட்டர் சுதந்திரப் பாணி நீச்சலில் வீராங்கனை யாங் யு சாம்பியன் பட்டம் தட்டிச் சென்றார். அவருடைய சாதனை 1 நிமிடம் 59.45 வினாடியாகும். ஐரோப்பிய குறுகிய தூர நீச்சல் சாம்பியன் பட்டப் போட்டி டிசம்பர் 12ந் நாள் இரவு ஆஸ்திரிய தலைநகரான வியன்னாவில் நிறைவடைந்தது. ஜெர்மனியின் வீரர்கள் ராபுலாட்டும் பொவேயும் தலா ஒரு தங்கப் பதக்கம் பெற்றனர். இதனால், ஜெர்மன் அணி 9 தங்கம் மற்றும் 22 வெள்ளி பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றது.

ஜிம்னாஸ்திக்ஸ் 2004ஆம் ஆண்டு உலக கோப்பைக்கான ஜிம்னாஸ்திக்ஸ் ஒட்டுமொத்த இறுதி போட்டியில் 12ந் நாள் 5 தனி நிகழ்ச்சிகள் நடந்தன. ஆடவருக்கான HORSE VAULTING நிகழ்ச்சியில் சீன வீரர் லுபின் தங்கப் பதக்கம் வென்றார். மகளிருக்கான சரி சமநிலை விட்டம் போட்டியில் லீ யாவும் ஆடவருக்கான இணைக் கம்பி (PARALLEL BARS) போட்டியில் ஹுவாங் சியும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். மகளிருக்கான தரை உடற்பயிற்சி போட்டியில் செங் பெய் ஒரு வேண்கல பதக்கம் பெற்றார். ஜூட்டோ டிசம்பர் 11ந் நாள் ஜப்பானின் FUKUOKA நகரில் நடைபெற்ற சர்வதேச மகளிர் ஜூட்டோ சாம்பியன் பட்டப் போட்டியின் 78 கிரோகிராம் பிரிவுப் போட்டியில் சீன வீராங்கனை லியூ சியா சாம்பியன் பட்டம் பெற்றார். ஜப்பானிய வீராங்கனைகள வேறு 3 தங்கப் பதக்கங்களை பெற்றனர். 25வது TOYOTA கோப்பைக்கான கால்பந்து போட்டி 12ந் நாள் இரவு ஜப்பானின் YAKOHAMA நகரில் நடைபெற்றது. அவ்வளவு கவர்ச்சியற்ற இந்த போட்டியில் ஐரோப்பிய PORTO FC அணி பெனால்டி கோல் மூலம் 8-7 என்ற கோல் கணக்கில் தென் அமெரிக்காவின் CALDAS அணியைத் தோற்கடித்தது.


1  2