
தோழர் தெங் சியௌ பிங் கட்டியமைத்த சிறப்புப் பொருளாதார பிரதேசமான சென் சென் நகரின் வளர்ச்சியும் மாற்றமும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை சீனா நனவாக்கியதன் சுருக்கமாகும். சீனசோஷ்லிச சமூகத்தின் மேம்பாடு ஆகியவற்றுக்கு அது உறுதியான எடுத்துக்காட்டும் ஆகும். கடந்த 20க்கும் அதிகமான ஆண்டுகளில் சிறப்புப் பொருளாதாரப் பிரதேசத்தின் சீர்திருத்த சோதனை களமாக பங்காற்ற சென் சென் நகர் பாடுபட்டுள்ளது. பொருளாதார அமைப்பின் சீர்திரத்தத்தை அது பன்முகங்களிலும் நடத்தி ஆழமாக்கி சோஷலிச சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கட்டுக்கோப்பை முதன்முதலாக அமைத்து, அவ்வாறு நாட்டின் பொருளாதார அமைப்பின் சீர்திருத்த்துக்கு அனுபவம் வழங்கியுள்ளது.

எடுத்துக்காட்டாக, ஹூவா வேய் கூட்டு நிறுவனம், கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியுற்ற கூட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். அது 50 ஆயிரம் யுவானுடன் பதிவு செய்த அரசு சாரா அறிவியல் தொழில் நுட்ப தொழில் நிறுவனமாகும். இக்கூட்டு நிறுவனம், முதலில் வெளிநாட்டுத் தொலை தொடர்பு சாதனங்களை விற்பனை செய்தது. வெகு விரைவில் அது தொலை தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்ய வல்ல புதிய ரக உயரிய அறிவியல் தொழில் நுட்ப தொழில் நிறுவனமாக மாறியுள்ளது.
சென் சென் நகர் முன்னேறிய தொழில் துறையின் தளமாக மாற வேண்டும். உயரிய தொழில் நுட்ப தொழிலை வளர்ச்சியுறச் செய்ய வேண்டும். அத்துடன் அரசு சாரா அறிவியல் தொழில் நுட்ப தொழில் நிறுவனங்களின் விரைவான வளர்ச்சிக்கு ஊக்கமளித்து தொடர்பான சென் சென் அரசு வெளியிட்டதோடு, இந்நகரில் முதலீடு செய்யுமாறு உள் நாட்டு வெளிநாட்டு உயர் அறிவியல் தொழில் நுட்ப தொழில் நிறுவங்களை வரவேற்பதெனவும் அது முடிவு செய்தது. இந்த கொள்கையுடன் இந்நகரில் பல உயர் தொழில் நுட்ப தொழில் நிறுவனங்கள் பெரும் அளவு வளர்ச்சியடைந்துள்ளன.
1 2
|