• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-20 15:52:32    
  சென் சென் நகரின் தொழில் நுட்ப வளர்ச்சி

cri

தற்போது அது சுய ஆய்வுடன் உற்பத்தி செய்த ஆக்கப்பொருட்கள், உலகின் பல்வேறு இடங்களில் விற்பனையாகின்றன. பரிமாற்றம், ஏற்றுக்கொள்ளல் பரவல், நகரும் செய்தித்தொடர்பு, கூட்டத்துக்கான தொலைக்காட்சி முதலான முக்கிய தொலை தொடர்பு துறைகள் உள்ளிட்ட சுதந்திரமான மைய தொழில் நுட்ப தொகுதி ஒன்று உருவாகியுள்ளது. ஒளி இணையம், நகரும் செய்தித்தொடர்பு அகல பாதை இணையம் ஆகிய துறைகளில் அது உலகின் முன்னணியில் உள்ளது. அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கிலும் இந்தியாவின் பெங்களூர் நகரிலும் இக்கூட்டு நிறுவனம் தன் ஆய்வு தளங்களை அமைத்துள்ளது. உள் நாட்டிலோ, அது பல்வேறு உயர் கல்வி நிலையங்கள் மற்றும் அறிவியல் ஆய்வு கூடங்களுடன் ஊக்கத்துடன் ஒத்துழைப்பு மேற்கொண்டுள்ளது. தன் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் அது பெரும் முக்கியத்துவம் அளிக்கின்றது. அதில் சுமார் 40 விழுக்காட்டினர், ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டுப் பணியில் ஈடுபடுகின்றனர். இப்பணிக்கான முதலீடு, ஆண்டு விறபனை தொகையில் 10 வழுக்காடாகும். இது பெரும் பயனை ஈட்டியுள்ளது மட்டுமின்றி, இக்கூட்டு நிறுவனத்தை வெகுவிரைவில் மாபெரும் பன்னாட்டு குழுமமாகவும் மாற்றியுள்ளது.

புதிய நூற்றாண்டில் சென் சென் நகர் உயரிய அறிவியல் தொழில் நுட்ப நகராகவும் சீனக் தனிச்சிறப்பியல்புடைய சோஷலிச முன்மாதிரி தளமாகவும் கட்டியமைக்கப்படும். இது புதிய காலகட்டத்தில் சென் சென்னின் புதிய வரலாற்றுப் பணியாகும். புதிய நூற்றாண்டில் சென் சென் நகர், உயரிய புதிய தொழில் நுட்ப தொழிலை வளர்ச்சியுறச் செய்து, முதலீட்டு சூழலை முழுமைப்படுத்துவது, முதலான துறைகளில் புதிய அருஞ்செயல்களை உருவாக்க வேண்டும். உள்நாட்டு வெளிநாட்டு நண்பர்கள் இங்கு வந்து சோதனை பயணம் மேற்கொண்டு, தொழில் நிறுவனங்களைக் கட்டியமைக்க முதலீடு செய்ய வேண்டுமென்று இந்நகரின் அதிகாரி ஒருவர் கூறினார்.


1  2