சீனத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடகத் துறையில் இளம் நடிகை யூ வெய் ஹொங்கை விரும்பும் ரசிகர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அவரை வெகுவாக புகழ்ந்து பாராட்டுகின்றனர்.
5 ஆண்டுகளுக்கு முன் சீனாவின் பல்வேறு தொலைக்காட்சி நிலையங்களில் ஒளிபரப்பாகிய "கைக் கோர்த்துக் கொள்கிறோம்" எனும் தொலைக்காட்சி நாடகத்தினால் அவர் புகழ் பெறலானார். இத்தொலைக்காட்சி நாடகத்தில் ஒரு தம்பதி அறிவாளரின் நெளிவு சுழிவான உணர்வு பற்றிய கதையைக் கூறுகிறது. திருமணத்துக்குப் பின் மனைவி முழு மூச்சுடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலானார். மனைவி தம் ஈர்ப்பு ஆற்றலை இழந்துவிட்டார் என கருதிய கணவனோ, தம் மனைவியைச் சலித்துக் கொள்ளலானார். தமது பணித்தலத்தில் 3வது நபரான ஓங் சென் என்பவளைக் காதலிக்கலானார். இதனால் ஒரு இன்பமான குடும்பம் உடைந்து விட்டது. யூ வெய் ஹொங் இத்தொலைக்காட்சி நாடகத்தில் ஓங் சென் எனும் கதா பாத்திரத்தை ஏற்று நடித்தார். பல்கலைக்கழக மாணவியான ஓங் சென் காதல் மீது பேரார்வம் கொண்டவர். அவர் தூய்மையான மனமுடைய நேர்மையானவர். அவர் கதா நாயகனின் நிகழ்வு வாழ்க்கை மீது ஆழந்த புரிந்துணர்வும் அனுதாபமும் கொண்டிருந்தார். தமக்குத் தெரியாமல் இருவருக்குமிடையில் காதல் ஏற்பட்டது. தாம் ஒரு 3வது நபர் என்பதை அறிந்து கொண்ட ஓங் சென் சிக்கல் வாய்ந்த மன நிலையுடன் மிகவும் துன்பற்றார். ஒரு புறம் கதா நாயகன் காதல் இல்லாத திருமணத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர் கருதினார். மறு புறம் நேர்மையான கதா நாயகி இன்னும் தம் கணவனை நேசிக்கிறார் என்பதை அவர் கண்டறிந்தார். தமது செயல் இக்குடும்பத்தைப் புண்படுத்தியதை உணர்ந்த ஓங் சென் கடினமான மனப் போராட்டத்துக்குப் பின் இச்சிக்கலிலிருந்து விலகி வெளியூருக்குச் சென்றார்.
யூ வெய் ஹொங் நடித்த ஓங் சென், ரசிகர்களின் அயல் வீட்டு பாவை போல் உள்ளார். அவர் அழும் போது தமது மகள் அழுவது போன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது. யூ வெய் ஹொங் நடித்த இந்தப் பாவையை ரசிகர்கள் விரும்புகின்றனர். இதனால் அவர் ரசிகர்கள் விரும்பும் தொலைக்காட்சி நட்சத்திரமாகியுள்ளார்.
யூ வெய் ஹொங் இந்நாடகத்தினால் புகழ் பெற்றார் என்று சிலர் கருதுகின்றனர். இருந்த போதிலும், தாம் ஈட்டிய வெற்றி தற்செயலான நிகழ்ச்சியாக இல்லை. மாறாக, இது தம்மை இடைவிடாமல் வளப்படுத்தி முழுமைப்படுத்துவதன் மூலம் தான் பெற்ற தவிர்க்க முடியாத விளைவாகும் என்று அவர் கருதுகிறார். அவர் கூறியதாவது—
"'கைக் கோர்த்துக் கொள்கிறோம்' என்றும் நாடகத்தில் நடிக்காவிட்டால் பிற நாடகத்தில் நடிப்பேன். எனக்குப் போதுமான ஆற்றல் இருக்கும் போது தான், ஒரு கதா பாத்திரத்தை நன்கு நடிக்கும் போது தான், ஒரு நல்ல கதா பாத்திரம் இருக்கும் போது தான், நான் பார்வையாளர் அல்லது அனைவரின் அன்பை பெறலாம்" என்றார் அவர்.
1 2
|