• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-21 08:13:28    
நடிகை யூ வெய் ஹொங்

cri

யூ வெய் ஹொங், தென் சீனாவின் ஹாங் சோ நகரில் பிறந்தார். 8 வயதான போதே, தமது நடிப்பு ஆற்றலை வெளிக்காட்டினார். ஜுனியர் பள்ளியின் முதலாவது ஆண்டு வகுப்பில் கல்வி பயின்ற போது, அவர் முதன்முதலாக ஒரு திரைப்படத்தில் கதா நாயகியாக நடித்தார். "கொலையாளியும் பயந்தாங்கொள்ளியும்" எனும் திரைப்படத்தில் அவர் 23 வயதான வழிகாட்டியாக நடித்தார். வழிகாட்டியும் தம் காதலனும் வெளியூருக்குப் போகும் போது காடையரால் கடத்திச் செல்லப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். காதலரின் கோழைத்தனத்தினால் அவர் கற்பழிக்கப்பட்டதோடு, மனமும் உடைந்துவிட்டார். நாணம் மற்றும் பேராத்திரத்தினால் காதலன் காடையரைக் கொன்றார். இதனால் அவர் சட்டவிதிகளை அத்துமீறினார். தம் காதலனைக் காப்பாற்றும் பொருட்டு, இந்தப் பாவை பொய் சாட்சி அளிக்கும் அளவுக்குச் சென்றார். 15 வயதான யூ வெய் ஹொங் கதா நாயகியின் உள்ள உணர்வை தத்ருபமாக நடித்தார். பார்வையாளர் அவரை வெகுவாக புகழ்ந்து போற்றினார்.

யூ வெய் ஹொங் ஜுனியர் பள்ளியிலிருந்து பட்டம் பெற்ற பின், பெய்ஜிங் திரைப்பட கல்லூரியில் கல்வி பயிலலானார். 1வது ஆண்டு வகுப்பில் கல்வி பயின்ற போது, திரைப்பட தயாரிப்பு உடன்படிக்கை வந்த வண்ணம் இருந்தது. 3வது ஆண்டில் அமெரிக்காவுக்குச் சென்று "இன்பகரமான சந்திப்பு" எனும் திரைப்படத் தயாரிப்புக்கு விரைந்தார். பட்டம் பெற்ற பின், அவர் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியலானார். சற்றுக் காலத்துக்குப் பின், தாம் மேலும் கூடுதலானவற்றைக் கற்றுக்கொண்டு மேலும் கூடுதலாக வாழ்க்கையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கருதி வெளிநாட்டுக்குச் சென்று கல்வி பயிலுவதென அவர் முடிவு வேற்கொண்டார். அவர் கூறியதாவது—

"கல்லூரியில் பணி புரிய துவங்கிய பின், நான் மிகவும் யௌவனம் என கண்டறிந்தேன். ஒரு ஆசிரியராக இருக்க வேண்டுமாயின், ஆசிரியர் எனக்குக் கற்றுக்கொண்டவற்றை அப்படியே மாணவருக்குக் கற்றுக்கொடுக்க நான் விரும்பவில்லை. ஒரு நடிகர், வாழ்க்கையிலிருந்து சேமித்தவற்றைக் கூடுதலாக கிரகித்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது, நடிதரின் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதி. அதில் புடம்போட்டெடுத்து அனுபவிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்" என்றார் அவர்.

யூ வெய் ஹொங் அமெரிக்காவுக்குச் சென்று கல்வி பயின்றார். முற்றிலும் பரிச்சயம் இல்லாத சூழ்நிலையில் அவர் தனிப்பட்ட முறையில் வாழ்க்கை நடத்தும் ஆற்றலை வளர்த்தார்.

யூ வெய் ஹொங், தம் தலைசிறந்த நடிப்பு ஆற்றலால் பல ரசிகர்களைக் கவிர்ந்தார்.

பார்வையாளர் அவரை அன்புடன் நேசிக்கின்றனர். இருந்த போதிலும் அவர் எளிய வாழ்க்கை நடத்துகிறார். நடிப்பது தவிர கலை வட்டாரத்தில் பிரபலமாவது குறைவு. அவருடைய நண்பர் பலர், கலை வட்டாரத்துக்கு அப்பால் உள்ளனர். யூ வெய் ஹொங் ஓய்நேரத்தில் நூல் படிக்கவும் தம் பெற்றோருடன் கலந்துரையாடவும் விரும்புகிறார். சில சமயம் சுற்றுலா மேற்கொள்கிறார். அவர் கூறியதாவது—

"நீங்கள் அனுபவித்தவற்றை மேன்மேலும் கூடுதலாக இருக்கும் போது அவற்றிலிருந்து ஊக்கம் பெற்று உழைப்பீர்கள். பின் அதை ஆழ்ந்து யோசிக்க வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் தாராள மனப்பான்மை உடையவராக இருக்க முடியும். இம்மாற்றம் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். ஏனெனில் குறுகிய மனப்பான்மையுடையவராக இருக்கும் போது, நீங்கள் மகிழ்ச்சி அடைய மாட்டீர்கள்" என்றார் அவர்.


1  2