சிங்கியாங்கின் பழவகை குறித்து பேசிய போது, திராட்சைப்பழம் பற்றி குறிப்பிடாமல் இருக்கமுடியாது. சிங்கியாங், விகுர் தன்னாட்சிப் பிரதேசம், சீனாவில் திராட்சைப்பழம் விளையும் முதலாவது முக்கிய பிரதேசமாகும். திராட்சை பயிரிடப்படும் நிலப்பரப்பு, சுமார் ஒரு லட்சம் ஹேக்டர் ஆகும். இது, நாட்டின் நிலப்பரப்பில் ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதியாகும். சிங்கியாங்கின் து லு பாங், சீனாவின் திராட்சைப்பழ ஊராகும். திராட்சைப்பழம் பயிரிடுவது 2000 ஆண்டுகால வரலாறுடையது. தற்போதும் ஒவ்வொரு குடும்பமும் திராட்சைப்பழம் பயிரிடுகின்றன.
சிங்கியாங்கில் சுவையான, ஏராளமான பழவகைகள் இருக்கின்றன. ஆனால், முன்பு, அங்கு போக்குவரத்து வசதி பற்றாக்குறை காரணமாக, சிங்கியாங்கிலிருந்து இப்பழங்கள் வெளியூருக்கு ஏற்றிச்செல்லுவது இல்லை. எனவே, அதிக நிலப்பரப்பில் அது பயிரிடப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளில், மேற்கு பிரதேசத்தில் அடிப்படை வசதி கட்டுமானத்தை சீனா வலுப்படுத்துவதுடன் விமானம், நெடுஞ்சாலை, இருப்புப்பாதை உள்ளிட்ட சிங்கியாங்கின் போக்குவரத்து வசதிகள் பெரிதும் மேம்பட்டுள்ளன. இன்றோ, சிங்கியாங்கின் வேவ்வேறான தனிச்சிறப்பியல்புடைய பழவகைகள், வசதியாகவும் பெருமளவிலும் சீனாவின் பல்வேறு இடங்களுக்கும் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பழ விற்பனை அதிகரிப்புடன், விவசாயிகள் மகிழ்கின்றனர். அவர்கள் பழவகைத்தொழிலை வளர்ச்சியுறச்செய்யும் வகையில், மேலும் அதிகமான நிலத்துக்கு ஒப்பந்த முறையில் பொறுப்பேற்றுள்ளனர். தற்போது, பழம் பயிரிடும் நிலப்பரப்பை விரிவாக்குமாறு விவசாயிகளுக்கு ஊக்கமளித்துள்ள அதே வேளையில், பழப்பொருளின் பதனீடு மற்றும் வளர்ச்சியில் கலந்து கொள்ளுமாறும் சிங்கியாங், தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளித்துள்ளது. தற்போது, 120 தொழில் நிறுவனங்கள், பதனிட்டுள்ள திராட்சை மதுபானம் மாதுலை சாறு, ஆப்ரிகாட் குழம்பு முதலியவை, உள்நாட்டு வெளிநாட்டுச் சந்தையில் வகிக்கும் வீத பங்கு, மேன்மேலும் அதிகமாகி வருகின்றது.
1 2
|