மத்திய சிங்கியாங்கின் டாலிமு வடிநிலத்தின் வடக்கு எல்லையிலுள்ள ஒரு மாவட்டத்தில் பிரெஞ்சு பாணியுடைய ஒரு மாபெரும் சிராட்சை மதுபானம் நிறுவனம் உண்டு. அதன் சுற்றுப்புறங்களிலும் ஆயிரத்துக்கும் அதிகமான ஹேக்டர் நிலப்பரப்புடைய திராட்சை பழத்தோட்டம் அமைந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன், சிங்கியாங்கைச் சேர்ந்த தொழில் முனைவோர் லீ ழுய் ஜின் அம்மையார், உலக புகழ் பெற்ற பிரான்சின் திராட்சை மதுபானம் வளப்பிரதேசத்தின் சில மதுபான நிறுவனத்து உரிமையாளருடன் ஒத்துழைத்து, சீன-பிரெஞ்சு கூட்டு முதலீட்டு மதுபான தொழில் வரைநிலை கூட்டு நிறுவனத்தை அமைத்துள்ளார்.
பிரெஞ்சு திராட்சை மதுபான நிபுணர்கள் இதில் பணிபுரிகின்றனர். இக்கூட்டு நிறுவனம் தயாரித்த திராட்சை மதுபானம் பெய்சிங், ஷாங்காய் முதலிய சீனாவின் பெரிய நகரங்களில் பெரிதும் வரவேற்கப்படுகின்றது. அன்றி, பிரான்சிலும் விற்பனையாகின்றது. இவ்வாண்டின் கோடைக்காலத்தில், சர்வதேச திராட்சை மற்றும் திராட்சை மதுபான நிறுவனத்தின் தலைவர் FEDERICO CASTELLUCCI மதுபான தொழிலைச் சோதனை செய்ய, சிங்கியாங்கிற்கு வருகை தந்து, அங்குள்ள திராட்சைத் தொழிலையும் திராட்சை மதுபானத்தொழிலையும் வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது:
சிங்கியாங்கில், மதுபானத்தைத் தயாரிப்பதற்கான இவ்வளவு சிறந்த திராட்சை விளைகின்றது என்பதை நினைத்து பார்க்கவே இல்லை. தற்போது, சர்வதேச சந்தையில் சீனாவின் திராட்சை மதுபானம் காண்பது அரிது. வெளிநாட்டவர் மனதில், சீன திராட்சை மதுபானம் ஆழப்பதிந்துள்ளதில்லை. சிங்கியாங்கின் திராட்சை மதுபானம் சீனச் சந்தைக்குள் நுழைய முடியும். அன்றி, பாடுபட்டு, சர்வதேசச் சந்தையிலும் நுழையலாம் என நான் கருதுகின்றேன் என்றார், அவர். 1 2
|