• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-23 09:55:15    
குழந்தை வளர்ச்சிக்கு தேவையான சத்து

cri

முதலாவது கட்டுரையில் குழந்தை பாதுகாப்பு பற்றிய தகவல் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கட்டுரையில் அதன் 2வது பகுதி தொடர்ந்து உங்களுக்குச் சேவைபுரிகின்றது. வைட்டமின் பி6. இதற்கு "பைரிடாக்சின்" என்று பெயர். இது குறைந்தால் வலிப்பு நோய் தசை அழற்சி, சோகை பிடித்தல், தோல் சருகாக உதிருதல் போன்றவை உண்டாகும். கருவுற்ற காலத்தில் சத்துணவு உட்கொள்ளாவிட்டால் குழந்தைக்கு இந்த நோய் கருவிலேயே ஏற்படும்.

வைட்டமின் பி12, இதற்கு "சைனோ கோபாலமின்" என்று பெயர். இதன் குறைவால் "மெக்ரோசைட்ஸ் அனீமியா" எனும் ஒரு வகை சோகை நோய் ஏற்படுகின்றது. இது இரும்புச் சத்துக் குறைவால் ஏற்படும் சோகையைப் போன்றது அல்ல. இது மாறுபட்டது. இதன் சிகிச்சையும் மாறுபட்டதாகும். பி 12 ஒன்றே இந்த சோகையை குணப்படுத்தக் கூடியது. நம் குடலில் நமக்கு நன்மையே தரக்கூடிய பாக்டீரியாக்கள் பல உண்டு. அவை செய்யும் நன்மைகளில் ஒன்று இந்த வைட்டமின்களை உற்பத்தி செய்து நமக்கு அளிப்பதாகும. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வைட்டமின் இரத்தத்தின் மூலம் எலும்புகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புது இரத்த அணுக்களை உற்பத்தி செய்கின்றன. குடலில் இந்த வைட்டமினின் உர்பத்தி குறைந்தால் இதனை உணவுடன் சேர்த்தோ அல்லது ஊசிகள் மூலமோ அளிக்க வேண்டும். உடலின் வளர்ச்சிக்கும் இந்த வைட்டமின் உதவுகின்றது குழந்தைக்கு இந்த வைட்டமின் குறைவால் சோகை மட்டுமின்றி நடுக்கம் மூளை வளர்ச்சிக் குறைவு போன்றவையும் ஏற்படும்.

வைட்டமின் பி குறைவினால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி இதுவரை அறிந்து கொண்டீர்கள். இனி வைட்டமின் பி அளிக்கப்படும் முறை பற்றி காணலாம்.
1  2