• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-23 09:55:15    
குழந்தை வளர்ச்சிக்கு தேவையான சத்து

cri

குழந்தைக்கு முதல் மாதம் நிறையும் போதே வைடாலின், வைசினரால் , அப்டெக் முதலிய வைட்டமின் சொட்டுக்களில் ஏதாவதொன்றை வழங்கலாம். நான்காவது மாதத்திலிருந்து சிறிது சிறிதாக தானிய உணவுகளைக் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும். அரிசிச் சோற்றுடன் நன்கு கடைந்த தயிர், கடைந்த கீரை, பருப்பு, காய்கறி ஆகியவற்றையும் சேர்த்து வழங்கலாம். குழந்தை வளர வளர கோதுமை கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அரைத்து மாவாக்கி உணவுகள் தயாரித்து கொடுக்கலாம்.

வைட்டமின் சி, இதன் பெயர் அஸ்கார்பிக் அமிலம் ஆகும். இது நீரில் கரையும் வைட்டமின். இது வெயில்பட்டாலும் சிறிதளவு சூடேறினாலும் அழிந்துவிடும். நெல்லிக்காய், கொய்யாப் பழம், எலுமிச்சை, ஆரஞ்சுப்பழம், காலிபிளவர், தக்காளி, உருளைக் கிழங்கு, வெங்காயம் போன்றவற்றில் வைட்டமின் சி உள்ளது. எலும்பிலுள்ள அணுக்களை ஒருங்கிணைக்கவும், பற்களைப் பாதுகாக்கும் டென்டைன் எனப்படும் பற்களின் உறை போன்ற சிமெண்ட் பகுதிக்கும் உடலில் தசைகள், நரம்புகள், இரத்தக் குழாய்கள் இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து வைத்திருக்கப் பயன்படும் ஒருவகை சவ்வுப் பொருளுக்கும் வைட்டமின்சி மிகவும் தேவைப்படுகின்றது.

வைட்டமின் சி மிகுதியாக பழங்களில் மிகுதியாக் கிடைக்கின்றது. எனவே குழந்தைக்கு தினமும் பழச்சாறோ அல்லது பழங்களோ கொடுத்து வர வேண்டும். பழங்களை சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவி அப்படியே கொடுக்க வேண்டும். தவிர, பழங்களையோ அவற்றின் சாற்றையோ கொதிக்க வைத்தோ, சிறிதளவு குடேற்றியோ அளிக்கக் கூடாது. இவ்வாறு செய்தால் வைட்டமின் சி அழிந்து விடும்.

வைட்டமின் டி, இதற்கு " கால்சிபெரால்" என்று பெயர். இது எண்ணெயில் மட்டும் கரையும் வைட்டமின். நாம் உண்ணும் உணவுகள் எதிலும் இந்த வைட்டமின் கிடையாது. ஆகையால் இந்த வைட்டமினை மட்டும் நாம் செயற்கையாகத் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஷார்க் லிவர் எண்ணெய், காட்லிவர் எண்ணெய் போன்றவற்றில் கூட மிகச் சிறிய அளவில் தான் இந்த வைட்டமின் உள்ளது. சூரிய ஒளியிலுள்ள அல்ட்ரா வயலட் கதிர்கள் நமது உடலில் படும்போது அவற்றின் உதவியால் நமது தோல் வைட்டமின் டியை உற்பத்தி செய்கின்றது. என்றாலும் நாம் அணியும் உடைகள், பயன்படுத்தும் வாகனங்கள் மூலம் உடலின் பெரும் பகுதியில் சூரிய ஒளி படுவதில்லை. மேலும் காற்றிலுள்ள தூசிகளும் வாயு வகைகளும் சூரிய ஒளியிலுள்ள கதிர்கள் நம் உடலில் படாதவாறு வடிகட்டி விடுகின்றன. இதனால் வைட்டமின் டி இயற்கையாகக் கிடைப்பது இல்லை. எனவே இவ்வைட்டமின் சொட்டு மருந்தாகவும் ஊசி மருந்தாகவும் கிடைக்கின்றது.

குழந்தை தங்கு தடையின்றி வளர வைட்டமின் டி மிகவும் தேவை. இதன் உதவியால் உணவிலுள்ள கால்சியமும் பாஸ்பரசும் குடலிலிருந்து இரத்தத்தில் கலக்கப்பட்டு எல்லா எலும்புகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஒவ்வொரு எலும்பிற்கும் வளரும் முளை ஒன்று உண்டு. அம்முனையில் முதலில் மெதுவான தண்டு போன்ற எலும்பு உற்பத்தியாகும். பின்னர் வைட்டமின் டி உதவியால் மட்டுமே ரத்தத்தில் காணப்படும் கால்சியமும் பாஸ்பரசும் சிறுசிறு அணுக்களாக அத்தண்டின் மேல் வந்து படியும். வைட்டமின் டி இல்லையன்றால் இவ்வணுக்கள் படியாது.

வைட்டமின் டி குறைவினால் குழந்தைக்கு ரிக்கட்ஸ் என்ற நோய் ஏற்படுகின்றது. எலும்புகள் வலுவின்றி, வளர்ச்சியின்றி வளைந்தும் உருக்குலைந்தும் காணப்படும். குழந்தை நலமாகத் தெரிந்தாலும் நடக்கும் குழந்தைகளுக்கு கால்கள் வளைந்தும், தவழும் குழந்தைகளுக்கு கை எலும்புகள் வளைந்தும் இருக்கும். குழந்தையின் உடலில் ஒருவகைச் சூடு எந்த ரமும் இருந்து கொண்டிருக்கும்.

ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 400 யூனிட் வைட்டமின் டி அளிக்கலாம். 3வது திங்களிலிருந்து வைட்டமின் டி சொட்டுக்கள் வழங்கலாம். 1 வயதாகும் போது மீன் எண்ணெநேயை காலையிலும் இரவிலும் அளிக்கலாம்.


1  2