
இக்கதை, தலைமுறை தலைமுறையாக, தை இனப் பிரதேசத்தில் பரவி வருகின்றது. இன்றும், தை இன மங்கையரின் உடைகளில், மயில் அலங்கரிக்கப்படுகின்றது. "நீர் தை" இன மங்கையரின் ஆடைகளும் அலங்காரமும் குறிப்பிடத்தக்கவை.

"நீர் தை" இனம், தை இனத்தின் ஒரு பிரிவு. நீர் ஓரத்தில் வாழ்வதால், இவ்வினத்துக்கு "நீர் தை இனம்" என்ற பெயர் வழங்கப்பட்டது. வெறும் காலால் நடக்கும் பழக்கமுடைய இவ்வின மங்கையர், நீளமான பாவாடை அணிகின்றனர். இத்தகைய வண்ண வண்ணப் பாவாடையும் மேல்சட்டையும் அணிந்துள்ளதால், உயரமான, நல்ல உடல் உருவமுடைய இம்மங்கையர், மரங்களிடையே உலா வரும் மயில் போல் காணப்படுவர்.
1 2 3
|