• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-27 16:01:21    
கடந்த வாரத்தில் உலகில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள்

cri

2004ஆம் ஆண்டு சர்வதேச சம்மேளனம் ஏற்பாடு செய்த இசை நடன பனிச்சறுக்கல் போட்டியின் ஒட்டுமொத்த இறுதிப் போட்டி 17, 18 நாட்களில் பெய்சிங்கில் நடைபெற்றது. சீன மற்றும் ரஷிய வீரர் வீராங்கனைகள் 4 தங்கப் பதக்கங்களைப் பகிர்ந்துகொண்டன. இரட்டையர் பனிச்சறுக்கல் போட்டியில் சீன வீராங்கனை சென் சுயே வீரர் சௌ ஹோங்போ ஜோடி தங்கப் பதக்கம் பெற்றது. ஆடவருக்கான ஒற்றையர் பனிச்சறுக்கல் போட்டியில் ரஷியாவின் புகழ்பெற்ற வீரர் PLISHENKO உம், மகளிருக்கான ஒற்றையர் பனிச்சறுக்கல் போட்டியில் ரஷிய வீராங்கனை SLUTSKAYA உம் தங்கப் பதக்கம் பெற்றனர். பனி நடனப் போட்டியில், ரஷிய பிரிவு சாம்பியன் பட்டம் பெற்றது. 

23வது இந்தோனேசிய பூப்பந்து ஒப்பன் போட்டி 19ந் நாள் நிறைவடைந்தது. இப்போட்டியில் சீன அணி 3 தங்கப் பதக்கங்களை வென்றது. மகளிருக்கான ஒற்றையர் போட்டியில் சீன வீராங்கனை சியே சிங் பாங் முதலிடம் பெற்றார். யாங்வேய், சாங் சியே வென் ஜோடி, மகளிருக்கான இரட்டையர் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது. ஆண் பெண் கலப்பு இரட்டையர் போட்டியில் சீன வீரர் சாங் சுன், வீராங்கனை கௌலிங் தங்கப் பதக்கம் வென்றனர். ஆடவருக்கான ஒற்றையர் போட்டியிலும் இரட்டையர் போட்டியிலும் இந்தோனேசிய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. மேசை பந்து டொயோட்டொ கோப்பைக்கான சர்வதேச மேசை பந்து அமைப்புப் போட்டி 19ந் நாள் சீனாவின் குவாங்சோ நகரில் நிறைவடைந்தது. சீன ஆடவர் அணி, தென் கொரிய அணியையும், சீன மகளிர் அணி சீன ஹாங்காங் அணியையும் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றன.

2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையைப் பெறுவதில் பிரான்சின் பாரிஸ் நகருக்கு அதிக வாய்ப்பு உண்டு. ராய்டர் எனும் செய்தி நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஒரு கள ஆய்வின் விளைவு இதைக் காட்டுகின்றது. அமெரிக்காவின் நியூயார்க், பிரிட்டனின் லண்டன் முறையே இரண்டாம் மூன்றாம் இடம் வகிக்கின்றன. மொத்தம் 20க்கும் அதிகமான நாடுகளின் 32 புகழ்பெற்ற விளையாட்டுத் துறை செய்தியாளர்கள் இந்த கள ஆய்வில் கலந்துகொண்டனர். அவர்களில் 18 பேர் பாரிஸுக்கு ஆதரவு தந்தனர். பாரிஸ் நகருக்கு பெரிய போட்டிகளை நடத்தும் அனுபவம் உண்டு. அதன் மிக சிறந்த போக்குவரத்து வசதிகள், சுகமான விடுதிகள், ஏற்கனவே உள்ள உயர் தரமுடைய விளையாட்டு அரங்கங்கள், நல்ல பாதுகாப்பு நிலைமை முதலியவை பாரிஸை செய்தியாளர்கள் தேர்ந்தெடுத்ததற்கான முக்கிய காரணமாகும்.

1  2