• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-12-27 16:01:21    
கடந்த வாரத்தில் உலகில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள்

cri

2004 ஆம் ஆண்டு சீன பாணி மற்போர் சர்வதேச அழைப்புப் போட்டி 19ந் நாள் சீனாவின் தியன்சின் நகரில் நிறைவடைந்தது. இதில் ஆடவர் போட்டி 10 பிரிவுகளில் நடந்தது. சீன வீரர்கள் 8 தங்கப் பதக்கம் பெற்றனர். பிரெஞ்சு வீரரும் மங்கோலிய வீரரும் தலா ஒரு தங்கப் பதக்கம் பெற்றனர். மகளிருக்கான 7 பிரிவுப் போட்டிகளில் சீன வீரர்கள் மொத்தம் 5 தங்கப் பதக்கங்களைப் வென்றனர். சீன ஹாங்காங் வீராங்கனையும் மங்கோலிய வீராங்கனையும் வேறு இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றனர்.

8வது ஆசிய மகளிர் SOFT BALL அழைப்பு போட்டி 19ந் நாள் பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் நிறைவடைந்தது. அன்று நடந்த அரை இறுதிப் போட்டியில் சீன அணி 4-5 என்ற ஆட்டக்கணக்கில் சீனத் தைபெய் அணியிடம் தோல்வி கண்டு இறுதியில் 3ம் இடம் பெற்றது. இறுதிப் போட்டியில் ஜப்பானிய அணி 5-0 என்ற ஆட்டக்கணக்கில் சீனத் தைபெய் அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. சீனத் தைபெய் அணி 2ம் இடம் பெற்றது. மொத்தம் 12 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அணிகள் இப்போட்டியில் கலந்துகொண்டன.

F1 கார் ஓட்டப் போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை 7 முறையாக பெற்ற சுமாஹும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 8 தங்கப் பதக்கங்களைப் பெற்ற பெட்டரும் அண்மையில் முறையே ஜெர்மனியின் 2004ஆம் ஆண்டுக்கான மிக சிறந்த ஆண், பெண் விளையாட்டு வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2004ஆம் ஆண்டு ஆசிய இளைஞர் ரக்பி பந்து சாம்பியன் பட்டப் போட்டி 18ந் நாள் சீனாவின் குன்மிங் நகரில் நிறைவடைந்தது. அரை இறுதிப் போட்டியில் சீன அணி 45-7 என்ற புள்ளியுடன் இலங்கை அணியைத் தோற்கடித்து மூன்றாம் இடம் பெற்றது. இந்தப் போட்டி யில் சீன இளைஞர் அணி வரலாற்றில் பெற்ற மிக சிறந்த சாதனை இதுவாகும். இறுதிப் போட்டியில் தென் கொரிய அணி ஜப்பானிய அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. டிசம்பர் 12ந் நாள் துவங்கிய இப்போட்டியில் ஆசியாவின் 12 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிக் அணிகள் கலந்துகொண்டன.

ராய்டர் செய்தி நிறுவனம் நடத்திய 2004ஆம் ஆண்டுக்கான தலை சிறந்த விளையாட்டு வீரர் தேர்தல் 21ந் நாள் லண்டனில் நிறைவடைந்தது. சுவீட்சர்லாந்து டென்னிஸ் வீரர் பெட்டரும் பிரிட்டனின் புகழ் பெற்ற தடக்கள் போட்டி வீரர் ஹோம்ஸும் முறையே 2004ஆம் ஆண்டு தலைசிறந்த ஆண், பெண் விளையாட்டு வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


1  2