• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-04 09:20:37    
தரிசு நிலத்தில் கார் நகர்

cri

சீனாவின் மத்திய பகுதிலுள்ள மிகப் பெரிய மாநகரான வு ஹானில், மாபெரும் கார் நகர் ஒன்று அமைந்துள்ளது. சீன மக்களுக்கு பரிச்சயமுள்ள கார், எடுத்துக்காட்டாக, FUKANG, ELYSEE, XSARA, PICASSO ஆகியவை, இங்கு தயாரிக்கப்படுகின்றன. இந்த கார் நகரமானது, சீன DONG FENG மோட்டார் வாகன உற்பத்தி கூட்டு நிறுவனமும் பிரெஞ்சு PSA PEUGEOT CITROEN குழுமமும் ஒத்துழைத்து நிறுவிய SHEN LONG மோட்டார் வாகன உற்பத்தி கூட்டு நிறுவனம் அமைந்துள்ள இடமாகும்.

SHEN LONG கார் நகரம், வு ஹான் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. அங்குள்ள சாலைகள் வலை பின்னல் போல் குறுக்கும் நெடுக்குமாக இணைந்திருக்கின்றன. சாலையின் இரு பக்கங்களிலும் உயர் கட்டிடங்கள் வரிசை வரிசையாக நிற்கின்றன. 10 ஆண்டுகளுக்கு முன், இங்கு தரிசு நிலமாகும் என்று SHEN LONG கூட்டு நிறுவனத்தின் பொறுப்பாளர் லி சியாவ் சிங் அம்மையார் செய்தியாளரிடம் கூறினார். அப்போதைய நிலைமை பற்றி, அவர் கூறியதாவது—

"இங்கு வந்தடைந்த போது, எங்கள் கண் முன்னே மஞ்சள் நிலம் மட்டும் காணப்பட்டது. நிலைமை சிரமமாக இருந்த போதிலும், கார் தொழிற்துறையின் மீது அனைவரும் எதிர்பார்ப்பு கொண்டுள்ளோம். எனவே, அதன் கட்டுமானத்தில் இரவும் பகலும் ஈடுபட்டுள்ளோம். 1995ஆம் ஆண்டு சப்டெம்பர் திங்களில், முதலாவது FUKANG கார் ஆலை களரியில் உருவாக்கப்பட்டது. அப்போது நாங்கள் அனைவரும் உணர்ச்சி வசப்பட்டோம்" என்றார் அவர்.

முன்பு இம்மஞ்சள் நிலத்தில் மனித நடமாட்டம் இல்லை. ஒரே மௌனம். தற்போது பரபரப்பாக உற்பத்தி செய்யும் காட்சி காணப்படுகிறது. SHEN LONG மோட்டார் வாகன உற்பத்தி கூட்டு நிறுவனத்தின் கார் தயாரிப்பு களரியில், தொழிலாளர்கள் தொடர் உற்பத்தி நெறியில் பரபரப்பாகவும் ஒழங்கான முறையிலும் பணி புரிகின்றனர். SHEN LONG கூட்டு நிறுவனத்தின் கார் இங்கு தயாரிக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது.

SHEN LONG கூட்டு நிறுவனத்தின் கார், இந்தக் கார் நகரில் இவ்வாறு தயாரிக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு இடங்களின் நுகர்வோருக்கு அனுப்பப்படுகிறது. இதனால் சீன மக்கள் பலரின் கார் கொண்டிருக்கும் கனவு நிறைவேற்றப்பட்டது. மேலும் கூடுதலான சீன மக்கள் காரை ஓட்ட விடுவது என்பது SHEN LONG மோட்டார் வாகன உற்பத்தி கூட்டு நிறுவனத்தின் விருப்பமாகும். 1998ஆம் ஆண்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் 50 ஆயிரம் கார்களையும் 2 லட்சம் விசைப் பொறிகளையும் உற்பத்தி செய்யும் தொடக்கக் காலக் குறிக்கோளை இக்கூட்டு நிறுவனம் நனவாக்கி விட்டது. வு ஹான் நகருக்கு வடமேற்கிலுள்ள சியாங் பான் நகரில், 5 லட்சம் சுதுர மீட்டர் பரப்பளவுடைய கார் விசைப் பொறி உற்பத்தி தொழிற்சாலையையும் அது கட்டியமைத்துள்ளது. தற்போது, 700 கோடி யுவான் பதிவு செய்யப்பட்ட மூலதனத்தைக் கொண்ட SHEN LONG கூட்டு நிறுவனம், சீனாவின் 3 பெரிய கார் உற்பத்தி கூட்டு நிறுவனங்களில் ஒன்றாகும்.

சீனாவில் இக்கூட்டு நிறுவனத்தின் விரைவான வளர்ச்சி, பிரெஞ்சு ஒத்துழைப்பு தரப்பின் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது இக்கூட்டு நிறுவனத்தின் பிரெஞ்சு தரப்பு மேலாளர் புரிசெர் கூறியதாவது—

"சீனாவும் பிரான்சும் மகிழ்ச்சியுடன் ஒத்துழைத்து வருகின்றன. இது பயன்மிக்கது என்று நான் கருதுகிறேன். ஏனெனில், இருதரப்பின் மேம்பாடுகளை இது ஒன்றிணைக்கிறது. தொழில் நுட்ப துறையில் பிரெஞ்சு தரப்பு முன்னேறிய தொழில் நுட்பத்தை வழங்குகிறது. தேசியமயமாக்கத்தை புரிந்துகொள்ளும் அளவு, தேசியமயமாக்கப் பண்பாடு பற்றிய பகுத்தறிவு ஆகியவற்றில் சீன தரப்பு மேலும் கூடுதலான மேம்பாடுகளைக் கொள்கிறது. இவ்வாறு இருதரப்பின் மேம்பாட்டை பரஸ்பரம் பயன்படுத்தினால், மாபெரும் பயனை வெளிக்கொணரலாம். SHEN LONG கூட்டு நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியின் மீது நான் நம்பிக்கை கொள்கிறேன்" என்றார் அவர்.

1  2