• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-04 09:20:37    
தரிசு நிலத்தில் கார் நகர்

cri

சீன கார் சந்தையின் மீதான அவரின் நம்பிக்கைக்கு போதுமான ஆதாரங்கள் உண்டு என்பது உறுதி. கடந்த சில ஆண்டுகளில், சீனப் பொருளாதாரம் வளர்ச்சியுறுவது மற்றும் குடி மக்களின் நுகர்வு நிலை உயர்வதுடன், சீனாவின் கார் சந்தையில் முன்னெப்போதும் கண்டிராத சிறப்பான நிலைமையும் தென்படுகிறது. 2003ஆம் ஆண்டில் 44 லட்சம் மோட்டார் வாகனங்களை சீனா விற்பனை செய்தது. அவற்றில் காரின் விற்பனை எண்ணிக்கை சுமார் 20 லட்சமாகும். கடந்த சில ஆண்டுகளில், மோட்டார் வாகனத்துக்கான நுகர்வு அளவு பற்றிய உலக பட்டியலில் சீனாவின் இடம் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. 2004ஆம் ஆண்டு, சீனாவில் மோட்டார் வாகனத்துக்குத் தேவையான மொத்த அளவு ஜெர்மனியில் இருப்பதை விட அதிகம். உலகில் 3வது இடம் வகிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

தற்போது, FUKANG கார் தவிர, ELYSEE, XSARA, PICASSO ஆகிய புகழ்பெற்ற கார்களை SHEN LONG மோட்டார் வாகன உற்பத்தி கூட்டு நிறுவனம் வளர்ச்சியுறச் செய்து தயாரித்துள்ளது. இந்தக் கார்கள் சந்தைக்கு வந்த பின், வேறுபட்ட அளவில் வாங்குவோரின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தொழில் நிறுவனத்தின் சிறப்பான நிலைமையைக் கண்டு, பேங் ஜுன் எனும் தொழிலாளி மேலும் முழுமூச்சுடன் வேலை செய்கிறார். தற்போதைய வருமானம் குறித்து அவர் மனநிறைவு அடைகிறார். அவர் எமது செய்தியாளரிடம் கூறுகிறார்.

"ஒவ்வொரு நாளும் நான் முழுமூச்சுடன் வேலை செய்கிறேன். வு ஹான் நகரில், எங்கள் ஊதியம் ஓரளவு அதிகமாகும். தாமாகவே தயாரித்த கார் ஒன்றை வாங்க நாங்கள் விரும்புகிறோம். ஒரு காரை வாங்க நான் திட்டமிடுகிறேன்" என்றார் அவர்.

தற்போது, புதிய வளர்ச்சி வாய்ப்பையும் அறைகூவலையும் SHEN LONG மோட்டார் வாகன உற்பத்தி கூட்டு நிறுவனம் எதிர்நோக்குகிறது. சீன குடும்ப காரின் முதலாவது சின்னத்தைப் படைக்கும் நெடுநோக்கு குறிக்கோளை அது முன்வைத்துள்ளது. சுமார் 5 ஆண்டுகளுக்குள், SHEN LONG மோட்டார் வாகன உற்பத்தி கூட்டு நிறுவனத்தை போட்டியாற்றல் மிகுந்த சர்வதேச நிலை மோட்டார் வாகன உற்பத்தி தொழில் நிறுவனமாக கட்டியமைக்கும் என்று அது முன்வைத்துள்ளது.

2004ஆம் ஆண்டு தொடக்கத்தில், 6.6 ஹெக்டர் நிலப்பரப்புடைய SHEN LONG மோட்டார் வாகன உற்பத்தி கூட்டு நிறுவனத்தின் 2வது கட்ட திட்டப்பணி வு ஹான் நகரில் துவங்கியது. திட்டப்படி, 2006ஆம் ஆண்டு வரை, இவ்விரண்டாவது கட்ட திட்டப்பணி நிறைவேறும். அப்போது, 3 லட்சம் கார்களையும் 4 லட்சம் விசைப் பொறிகளையும் உற்பத்தி செய்யும் ஆற்றலை இக்கூட்டு நிறுவனம் கொண்டிருக்கும். சீன நுகர்வோருக்கு மேலதிக புதிய ரக கார்களையும் மேலும் சிறந்த சேவையையும் அது வழங்கும்.


1  2