"தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்வதிலும் சந்தையை விரிவாக்குவதிலும் வெப்பக்கூடு அறையில் பயிரிடுவோருக்கு மிக முன்னேறிய தொழில்நுட்பத்தையும் சந்தைத் தகவலையும் வழங்குகின்றோம். கடந்த சில ஆண்டுகால முயற்சி மூலம் இப்போது சங்கத்தில் 11 குடும்பங்கள் சேர்ந்துள்ளன. விதை வேதியியல் உரம் ஆகியவை அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன அவர்களின் காய்கறிகளும் மலர்களையும் விற்பனை செய்கின்றோம். வருமானம் பரவாயில்லை" என்றார், அவர்.
உள்ளூர் அரசாங்கத்தின் பரவலுடனும், அ லு போன்ற திபெத் இனத்தவரின் மாதிரியுடனும், தற்போது, திபெத் இன மக்கள், காய்கறிகளை உட்கொள்ளாத பழக்க வழக்கங்களை மாற்றியுள்ளனர். வெப்பக் கூடு அறையில் விளைந்த காய்கறிகள், திபெத் இனத்தவரின் உணவுப்பொருட்களில் சேர்ந்ததால், அவர்களின் வாழ்க்கை நிலை மேம்பட்டுள்ளது.
கிராமவாசி கூ மா கா ச்சு எனும் மூத்தவன், உணவு மேசையில் காணப்படும் மாற்றம் பற்றி உணர்ச்சிவசப்பட்டு கூறியதாவது:
"முன்பு, உருளைக்கிழங்கு மற்றும் பார்லி மாவ் மட்டும் உட்கொண்டோம். இப்போது காயிகறிகளைச் சாப்பிடுகின்றோம். நாள்தோறும் ஓரிடு காய்கறிகளைச் சமையல் செய்கின்றோம். முந்திய உணவுகளை விட தற்போதைய உணவு கட்டமைவு மேலும் நியாயமானது" என்றார், அவர். 1 2
|