• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-06 14:00:32    
தீவு ஏரி

cri
கடந்த முறையில் ஆயிரம் தீவு ஏரி பற்றி அறிமுகப்படுத்தினோம். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன?சீனாவுக்கு வருகை தந்து இவ்விடத்தில் சுற்றுலா மேற்கொள்ள விரும்புகிறீர்களா?இக்காட்சி தலம் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகின்றேன். இது தொடர்பான கருத்தைக் கடிதம் மூலம் அல்லது சீன வானொலி நிலையத்தின் இணைய தளம் மூலம் தெரிவிக்கலாம் அல்லவா?வாய்ப்பு கிடைக்கும் போது சீனாவுக்கு வந்து ஆயிரம் தீவு ஏரியைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்போது, இந்த அழகான தீவு ஏரி பற்றி
தொடர்ந்து அறிமுகப்படுத்துகின்றேன்.

இத்தீவில் அழகான மலைகள் காணப்படுகின்றன. பெரிய மரங்களும் சிறிய மரங்களும் அங்கும் இங்கும் காணப்படுகின்றன. இவ்வேரியிலுள்ள தீவுகளுக்கு அவற்றின் வடிவம் அல்லது உள்ளடக்கத்தின் படி, பெயர் சூட்டப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மான் தீவு, ஒட்டகத் தீவு, மெய்வுன் தீவு முதலியவற்றைக் குறிப்பிடலாம். யூகொவுன் கூறுகிறார், தற்போது இத்தீவு ஏரி மண்டலத்தில் 13 காட்சித் தலங்கள் உள்ளன. மெய்வுன் மலைக் காட்சித்தலம், சுற்றுலா மேற்கொள்வதற்கும் நல்ல இடமாகும். இம்மலையின் உச்சியில் நின்றவாறு, ஏரியிலுள்ள 300க்கும் அதிகமான தீவுகளைப் பார்வையிடலாம். வன்சிங் தீவு, விடுமுறையைக் கழிப்பதற்கு ஏற்ற இடமாகும். வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்து, உணர வேண்டுமானால், லுங்சான் காட்சித் தலத்துக்குச் செல்வது நல்லது என்றார் அவர்.

1  2