• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-06 14:00:32    
தீவு ஏரி

cri

ஆயிரம் தீவு ஏரியில் உலா செல்லும் போது, அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்களையும் உணரலாம். அவர்கள், தொன்மை வாய்ந்த தனிச்சிறப்பியல்பு மிக்க வாழ்க்கை நடத்துகின்றனர். முன்பு, இவ்வேரி நீர் சேகரிக்கப்பட்ட போது, அப்போதைய பண்டைய நகர், நீரில் மூழ்கியிருந்தது. பல பத்து ஆண்டுகளாக, இந்நகரம் தொடர்ந்து நீரில் மூழ்கியுள்ளது என்று சாங் சிபெங் கூறினார். இந்த ஏரி நீரில், சுமார் 25 மீட்டர் ஆழத்தில் புராதன நகரம் உள்ளது. நீர் வெப்பம், ஆண்டு முழுவதும் சுமார் 20 டிகிரி செல்சியஸ் ஆகும். நகரின் சுவர்களில் பெரும்பாலானவை, செவ்வனே பாதுகாக்கப்பட்டுள்ளன. அவை, கல், செங்கல் ஆகியவற்றால் ஆனவை. வழுவழுப்பானவை. இங்கு 3 நகரக் கதவுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு கதவு பாதியளவு திறந்தவாறு காணப்படுகின்றது. நகரிலுள்ள சிலவீடுகளின் மரத் தூண், செங்கல் சுவர் ஆகியவை பாழாகாமல் பழைய நிலைமையிலேயே உள்ளன. சில இருப்பிடங்களின் நான்கு சுவர்களும் முழுமையாக உள்ளன. வீடுகளிலுள்ள மரச் சாமானகள், முன்பு இருந்த இடத்தில் அப்படியே காணப்படுகின்றன. சிற்பத் தூண், நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது என்றார் அவர். புராதன நகரில் உலா என்னும் தலைப்பிலான சுற்றுலாவை தற்போது ஏற்பாடு செய்ய இப்பிரதேசம் ஆயத்தம் மேற்கொண்டுள்ளது. பயணிகள், நீர் மூழ்கி கப்பல் மூலம், புராதன நகரின் ரகசியத்தைக் கண்டறியலாம் என்று சாங்சிபெங் கூறினார்.


1  2