• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-04 21:46:12    
சீன சிறுபான்மைத் தேசிய இன நாட்டுப்புறப்பண்பாடு

cri

சீனா, 56 தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு. ஹான் இனம் தவிர, ஏனைய 55 சிறுபான்மைத் தேசிய இனங்கள், கலை இலக்கியம், சமூக பழக்க வழக்கம், உற்பத்தி மற்றும் வாழ்க்கை முதலியவற்றில் சொந்த இனத்தின் தனித்துவம் வாய்ந்த பண்பாட்டினைக் கொண்டுள்ளன. அவற்றின் பண்பாட்டில் பல, மனிதகுல நாகரிகத்தின் மதிப்பு மிக்கவை. அவை, உயர்ந்த கலை மதிப்புடையவை. ஆனால் சமூக வளர்ச்சிப்போக்கில், சில தேசிய இனங்களின் பண்பாடு, அழிவின் விளிம்பில் உள்ளது. அவற்றைக் காப்பாற்றுவதும் பாதுகாப்பதும் உடனடித் தேவை ஆகும். தேசிய இனத்து பண்பாட்டின் பலதரப்பட்ட தன்மையை நிலைநிறுத்தும் வகையில், சிறுபான்மைத் தேசிய இன நாட்டுப்புறப் பண்பாடு தொடரும் பொருட்டு, சீன அரசு, இப்பண்பாட்டை கள ஆய்வு செய்து சரிப்படுத்தி பாதுகாக்கின்றது.

இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, "12 மொகமு" என்பதன் அரங்கேற்ற ஒலிப்பதிவாகும். மேற்கு சீனாவின் சிங்கியாங் விகுரி தன்னாட்சிப்பிரதேசத்தில் பரவி வரும், நாட்டுப்புற கதைப்பாடல் கலை, இதுவாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகால வரலாறு கொண்டது. விகுர் இன நாட்டுப்புறக் கலைஞர்கள், தேசிய இன இசைக்கருவிகளின் துணையுடன் சொந்த இனத்தின் வரலாற்றுக் கதையை சொல்லிக்கொண்டே பாடுவது, அதன் அரங்கேற்ற வடிவமாகும். நீண்டகாலமாக, நாட்டுப்புறக்கலைஞர்கள், இதை சுயமாக வெளிக்கொணர்ந்து வருகின்றனர். ஆனால், காலப்போக்கில், இத்தகைய வடிவம், இல்லாமல் போகும் விளிம்பில் உள்ளது. 1960ம் ஆண்டுகள் முதல், சீன அரசு அனுப்பிய, சிறப்பு பணியாளர்கள், சிங்கியாங்கில் "12 மொகமு" இன் வேறுபட்ட மதிப்புகளின் பாடல்வரிகளைச் சரிப்படுத்தி வருகின்றனர். அத்துடன், விகுர் இனத்தின் இப்பாரம்பரிய கலை, செவ்வனே பாதுகாத்து வளர்ச்சியுறச்செய்யப்படும் வகையில், சிறப்பு கதை-பாடல் கலைஞர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

1  2