• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-04 21:46:12    
சீன சிறுபான்மைத் தேசிய இன நாட்டுப்புறப்பண்பாடு

cri

சீன அரசு மேற்கொண்டுள்ள இப்பணியானது, சிறுபான்மைத் தேசிய இன நாட்டுப்புறப் பண்பாட்டைப் பாதுகாக்கும் நடைமுறை பணிகளில் ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளில், சிறுபான்மைத் தேசிய இன நாட்டுப்புறப் பண்பாட்டின் மீதான பாதுகாப்பை வலுப்படுத்த, சீனாவின் தொடர்புடைய வாரியம், பணி மேற்கொண்டுள்ளது. சட்டமியற்றல், நிர்வாக முறைமையை முழுமையாக்குவது, நடைமுறை பாதுகாப்பு நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான முழுமையான நடவடிக்கைகள் வகுக்கப்பட்டுளளன. சீனத் தேசிய இன விவகாரக்கமிட்டியின் பண்பாட்டுப் பிரச்சாரத்துறையின் தலைவர் கிம் சிங் வாங் அம்மையார், இப்பணி பற்றி எடுத்துக்கூறியதாவது:

தேசிய இனப் பாரம்பரிய பண்பாட்டின் மீதான பாதுகாப்பில் சீனா மிகுதியும் கவனம் செலுத்துகின்றது. அதிக அளவு பணி மேற்கொண்டுள்ளது. ஒன்று, சட்டமியற்றல் பணி, "தேசிய இன நாட்டுப்புறப் பண்பாட்டுப் பாதுகாப்பு சட்டத்தை" வகுக்க துவங்கியுள்ளோம். இரண்டு. தேசிய இன நாட்டுப்புறப் பண்பாட்டுத் தலைமைக்குழுவும் நிபுணர் குழுவும் நிறுவப்பட்டுள்ளன. மூன்று. நாட்டுப்புறப் பண்பாட்டுப் பாதுகாப்புக்கான சோதனைப் பணி ஏற்கனவே துவங்கியுள்ளது. நான்கு. சீனாவின் ஈராயிரத்துக்கும் அதிகமான கிராமங்களில் தேசிய இந நாட்டுப்புறப் பண்பாடு களவாய்வுக்குள்ளாகின்றது. என்றார் அவர்.


1  2