திபெத்திய சிகாச்சே பிரதேசத்து சியாங் ச்சி மாவட்டத்தில் திபெத் இன இடையர் டாங் சங், பிறர் செய்யத்துணியாதவற்றை செய்ய விரும்புபவர். எடுத்துக்காட்டாக, அவர்தம் கிராமத்தில், வண்டியை வாங்கி போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள முதலாவது இடையராவார். இவ்வாண்டு கடன் வாங்கி, பத்துக்கும் அதிகமான கறவை பசுகளை வாங்கி வளர்த்துள்ளார். அவர் வள மடைந்தமை பற்றி இன்று கூறுகின்றோம்.
சிகாச்சேயிலிருந்து புறப்பட்டு, அகலமான தார்ச்சாலை நெடுகிலும் கிழக்கே நோக்கி சென்று, வட்டமான புல் வெளியில் பத்துக்கும் அதிகமான கறுப்பு-வெள்ளை நிறம் கலந்த கறவைப் பசுகள் காணப்படுகின்றன. இவ்வாண்டு டாங் சங் புதிதாகக் கட்டியமைந்துள்ள கறவைப் பசு வளர்ப்பு பண்ணை இதுவாகும். இதன் பரப்பளவு சுமார் ஈராயிரம் சதுரமீட்டாகும்.
டாங் சங், சியாங் ச்சி மாவட்டத்தின் ஒரு சாதாரண இடையர். ஆறு திங்களுக்கு முன், சாங் சி மாநிலத்திலிருந்து 15 கறவைப் பசுகளை வாங்கி தமது மாவட்டத்தில் முதலாவது கறவைப் பசு வளர்ப்பு பண்ணையை அமைத்தார். கறவைப் பசு வளர்ப்புத் தொழிலில் ஈடுபடாத இம்மாவட்டத்தில் இது பெரும் பரப்பரப்பை எழுப்பியுள்ளது. ஏனெனில், சியாங் ச்சி மாவட்டத்தில் வேளாண்துறை வளர்ச்சியடைந்து வருவதினால், கறவைப் பசு வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுவோர் எவரும் இல்லை.
1 2
|