உண்மையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே, கறவைப் பசு வளர்ப்பு பண்ணையை நடத்துவதென்ற எண்ணம் டாங் சங்கிற்கு ஏற்பட்டு விட்டது. போக்குவரத்துத் துறையில் ஈடுபடுவதென்ற வாய்ப்பினைப் பயன்படுத்தி, அவர், திபெத்தின் பல இடங்களுக்குச் சென்று, கள ஆய்வு செய்து, கறவைப் பசு இனங்கள் மற்றும் வளர்ப்புமுறை பற்றி ஆராய்ந்துள்ளார். அதிக பால் தரும் பசுக்களை வளர்ப்பது, மிக முக்கியமானது என்ற முடிவுக்கு வந்தார். ஒரு நாள் திபெத் தொலைக்காட்சியின் "பீடபூமி அறிவியல் தொழில்நுட்பம்" என்ற நிகழ்ச்சி மூலம், உள்பிரதேசத்தில் கறுப்பு-வெள்ளை நிறம் கலந்த பசு அதிக பால் தரும் என அறிந்தார். எனவே, இத்தகைய பசுகளை வாங்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார். செய்தியாளரிடம் அவர் கூறியதாவது
"முடிவு செய்த பின், எனக்காக என்னுடைய தம்பி, இணைய மூலம் தொடர்புடைய தகவலைத் தேடி கண்டார். சாங் சி மாநிலத்தில் கறுப்பு-வெள்ளை நிறம் கலந்த கறவைப் பசு வளர்ப்புப் பண்ணை ஒன்று உண்டு என்று நான் அறிந்தேன். பின்னர், 80 ஆயிரம் யுவானையும் கடனாக வாங்கிய ஒரு லட்சத்து 50 ஆயிரம் யுவானையும் எனது இரண்டு தம்பிகளிடம் கொடுத்து சாங் சி மாநிலத்துக்குச் சென்று கறவைப் பசு வாங்குமாறு கேட்டுக்கொண்டேன்" என்றார், டாங் சங்.
இவ்வாண்டு ஜுன் திங்கள் ஒரு நாள், 15 கறவை பசுகள் சாங் சி மாநிலத்திலிருந்து சியாங் ச்சி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டன. இச்செய்தி பரவியதும், தொலைத் தூர மற்றும் பக்கத்து கிராமங்களின் விவசாயிகளும் இடையர்களும் பார்வையிட இம்மாவட்டத்துக்கு வந்தனர். மாவட்டத்து தலைவர்களும், கறவைப் பசு வளர்ப்புத் தொழில் நுட்பம், தீவனம் முதலிவற்றில் டாங் சங்கிற்கு உதவி அளித்தனர். 1 2
|