• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-14 11:27:06    
சிறுபான்மை தேசிய இன ஊழியருக்கான பயிற்சி

cri

மத்திய தேசிய இன ஊழியர் கல்லூரி

பெய்சிங்கின் வட மேற்கு புறநகரில் அமைந்துள்ள மத்திய தேசிய இன ஊழியர் கல்லூரி, சீனாவின் 55 சிறுபான்மை தேசிய இனத்து ஊழியரைப் பயிற்றுவிக்கும் ஒரு சிறப்பு பள்ளியாகும். சிறுபான்மை தேசிய இன ஊழியரைத் தேர்ந்தெடுத்து பயிற்றுவிக்கும் கொள்கையானது, சீனாவின் தேசிய இனக் கொள்கையின் ஒரு முக்கிய பகுதியாகும் என்று கூறலாம். அரசியல் ரீதியில் தேசிய இனங்கள் சரிசமம் என்பதன் திட்டவட்டமான வெளிப்பாடு இதுவாகும். நாட்டின் அரசியல் வாழ்க்கை, ஜனநாயகமயமாவதன் அறிக்குறிகளில் இது ஒன்றாகும்.

மத்திய தேசிய இன ஊழியர் கல்லூரி

செங் சிங் கோ என்பவர், மத்திய தேசிய இன ஊழியர் கல்லூரியில் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு கொரிய இன ஊழியராவார். வட கிழக்கு சீனாவின் கொரிய இனம் குழுமி வாழும் பிரதேசத்தைச் சேர்ந்தவர். தேசிய இன ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதென்ற கொள்கை, சிறுபான்மை தேசிய இன பிரதேசத்தில் ஊழியர்களின் கல்வியறிவை மேம்படுத்துவதற்கும், தேசிய இனப் பிரதேசத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் பெரும் பங்காற்றியுள்ளது என்று அவர் கரத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

"சிறுபான்மை தேசிய இன ஊழியர்களைப் பயிற்றுவிப்பதென்ற சீனாவின் கொள்கை, உண்மையில் மிக நல்லது. இதன் மூலம், பல்வேறு தேசிய இனங்களும் சரிசமமாக நடத்தப்படுகின்றன. பயிற்சி பெற்ற பின் தேசிய இனப்பிரதேசத்துக்குத் திரும்பி பணி புரியும் போது, சொந்த திறன் வெகு விரைவாக உயர்ந்து வருவதை உணர்ந்துள்ளோம். எனது முன்னேற்றம், தேசிய இன ஊழியர் மீதான நாட்டின் கொள்கையிலிருந்து பிரிக்க முடியாதது" என்றார், அவர்.

1  2