• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-14 11:27:06    
சிறுபான்மை தேசிய இன ஊழியருக்கான பயிற்சி

cri

செங் சிங் கோ போல் சிறப்பு பயிற்சி பெற்றுள்ள சிறுபான்மை தேசிய இன ஊழியரின் எண்ணிக்கை, சீனாவில் சுமார் 27 லட்சமாகும். தேசிய இன பிரதேசத்து அரசியல், பொருளாகாரம், அறிவியல் தொழில்நுட்பம், பண்பாடு, கல்வி, நலவாழ்வு முதலிய துறைகளில் அவர்கள் பணிபுரிகின்றனர். அங்குள்ள பொருளாதார கட்டுமானத்துக்கும் சமூக வளர்ச்சிக்கும் அவர்கள் முக்கிய பங்கை ஆற்றியுள்ளனர்.

தற்போது, சீனாவின் 5 தேசிய இனத் தன்னாட்சிப்பிரதேசங்கள், 30 தேசிய இன தன்னாட்சி சோ, எனப்படும் கோட்டங்கள், 120 தேசிய இன தன்னாட்சி மாவட்டங்களின் அரசுகள் ஆகியவற்றின் முக்கிய தலைவர்கள் அனைவரும், மண்டல தன்னாட்சியிலுள்ள சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களே, தேசிய இனத் தன்னாட்சி உரிமையின் அடையாளமாகவும், செயல்படுத்துபவராகவும் விளங்குகின்றனர். சீனாவின் பல்வேறு நிலை மக்கள் பிரதிநிதிகளிலும், பல்வேறு நிலை அரசியல் கலந்தாய்வு மாநாட்டு உறுப்பினர்களிலும் சிறுபான்மை தேசிய இனத்தவர் இடம்பெறுகின்றனர். பல்வேறு நிலை கட்சி மற்றும் அரசின் பணியகங்களும், சிறுபான்மை தேசிய இன ஊழியர்களைப் பயிற்றுவிப்பதிலும் அவர்களைப் பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றன.

சிறுபான்மை தேசிய இன ஊழியர்களைப் பயிற்றுவிக்கும் பணி, கடந்த நூற்றாண்டின் 50ம் ஆண்டுகளில் துவங்கியது. சீன சிறுபான்மை தேசிய இனக்கல்வி ஆய்வகத்தின் தலைவர் தெங் சிங் இதை அறிமுகப்படுத்தியதாவது:

"20ம் நூற்றாண்டின் 50ம் ஆண்டுகளின் துவக்கத்தில், சிறுபான்மை தேசிய இன ஊழியர்களைப் பயிற்றுவிக்கும் நோக்கத்துடன், தேசிய இனக் கல்லூரியை நிறுவ மத்திய அரசு முடிவு மேற்கொண்டது. கடந்த 50 ஆண்டுகால வளர்ச்சி மூலம், சிறுபான்மை தேசிய இன ஊழியரைப் பயிற்றுவிப்பதற்கான முழுமையான முறைமை உருவாயிற்று. இதற்கென, மத்திய நிதித்துறை, சிறப்பு பணத்தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது" என்றார், அவர்.


1  2