• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-13 12:06:41    
கவர்ச்சிகரமான சியு ச்சாய்கொவ் இயற்கை காட்சித் தலம்

cri

பிரபல இயற்கை காட்சித் தலமான சியு ச்சாய்கொவ் மனிதக் குலத்தின் சுவர்க்கம் என அழைக்கப்பட்டுவருகின்றது. அது, உலக இயற்கை மரபுச் செல்வமாகும். சியு ச்சாய்கொவ் என்பது சுமார் 40 கிலோமீட்டர் ஆழமுடைய பள்ளத்தாக்காகும். இப்பள்ளத்தாக்கில் 9 திபெத் இன சிற்றூர்கள் இருப்பதன் காரணமாக இவ்விடம் புகழ்பெற்றுள்ளது. சுமார் 620 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவுடைய சியு ச்சாய்கொவில் ஆட்கள் குறைவு. நவீனமாக்கத்தின் பாதிப்பு இல்லாமல் இயற்கை காட்சி அழகு ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இவ்விடத்தில் நுழைந்த பின் காணக் கூடிய இடங்கள் எல்லாம் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும். பச்சை நிற மலைகள், அமைதியான நீர், மரப்பலகைகளால் போடப்பட்ட நீளமான குறுகிய பாதைகள், மலையில் உலா போகும் வெண்ணிற மேகக் கூட்டங்கள் முதலியவை கண்ணைக் கவர்கின்றன.

இங்குள்ள நீர் பயணிகளை வியப்படையச் செய்யக் கூடியது. சில சமயத்தில் இந்நீர், நீலமணிக் கல் போல நீல நிறமுடையது. சில சமயத்தில், பச்சைக் கல் போல பச்சை நிறமுடையது. இது பற்றி ஒரு கனெடிய பயணி கூறுகிறார், என் பெயர் லின்தா. நான் கனெடியர். இவ்விடம் எழில் மிக்கது. குறிப்பாக இங்குள்ள நீர் தனிச்சிறப்பியல்பு வாய்ந்தது. இந்நீர் இவ்வளவு நீல நிறமுடையது ஏன்?ஆகாயத்தை விட நீல நிறமுடையது ஏன் என்று எனக்குத் தெரியாது. சியு ச்சாய்கொவ், ஓர் அருமையான எழில் மிக்க இடம் என்பது உண்ம என்றார் அவர். இந்த வண்ண நிற நீர், சில வேளையில் பள்ளத்தாக்கில் அமைதியாக ஓடுகின்றது. அது, வண்ண நாடா போல, மலைகளுக்கிடையில் தொங்கவிடப்படுகின்றது.
1  2