• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-13 12:06:41    
கவர்ச்சிகரமான சியு ச்சாய்கொவ் இயற்கை காட்சித் தலம்

cri

சில வேளையில், மலைகளுக்கு ஊடே பாய்ந்து ஓடி, பீடபூமியில் தெளிந்த நீருடன் கூடிய ஏரியை உருவாக்கியுள்ளது. சில வேளையில், அது மலையிலிருந்து அருவியாகக் கொட்டுகிறது. நீர் வீழ்ச்சி வேறுபட்ட வடிவத்தில் காணப்படலாம். அவற்றில் பல பத்து மீட்டர் அகலமுடைய பச்சை நீர், வழுவழுப்பான பட்டுத் துணிப் போல் மலையிலுள்ள ஏரியில் நுழைந்தமை எழில் மிக்கது. 50 வயதுக்கு மேற்பட்ட சௌ ஸ்காங் என்பவர், தென் மேற்கு சீனாவின் சுங்சிங் மாநகரிலிருந்து வந்த பயணி. அவர் சியு ச்சாய்கொவில் ஒரேயடியில் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் நடந்துவிட்டார். எனினும், களைப்பு உணரவில்லை. சியு ச்சாய்கொவிலுள்ள ஏரி நீர் எவ்வளவோ அழகாக இருப்பதால், மக்களுக்குக் களைப்பு தெரியாமல் போயிற்று என்றார் அவர். சியு ச்சாய்கொவிலுள்ள நீர் எழில் மிக்கது. ஈடிணையற்றது. பளிங்கு போன்றது. வண்ண நிறமுடையது. குறிப்பாக பல ஏரிகள் உள்ளன. அவற்றில் பல தூய்மையான நீல நிறமுடையவை. மிகவும் சிறப்பானது என்றார் அவர்.

சியெ ச்சாயிலுள்ள நீர் மிகவும் மர்மமான முறையில் வண்ணங்கள் மாறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன என்று சிறு வயதிலிருந்தே சியு ச்சாய்கொவில் வாழ்ந்துவரும் திபெத் இன நங்கை யெவொன் எமது செய்தியாளரிடம் கூறினார். நீரில் 200க்கும் அதிகமான பாசிவகைகள் உள்ளன என்பது இதற்கு ஒரு காரணமாகும். ஏனெனில், தாவரங்களின் நிறம் வேறுபட்டதால் வெவ்வேறான நிறங்களில் நீர் காணப்படுகின்றது. சூரிய ஒளியின் பிரதிபலிப்பினால் நீரின் நிறம் வேறுபடுகிறது என்பது இதற்கு மற்றொரு காரணமாகும். சூரியன் ஒளியில், வேறுபட்ட கோணத்திலும் நேரத்திலும் திசையிலும் நின்றவாறு, சியு ச்சாய்கொவ் நீரைக் காணும் போது, நீரின் நிற மாற்றத்தைக் கண்டுகளிக்கலாம் என்றார் அவர். மழைக்குப் பின், மலைகளுக்கிடையிலும் நீரிலும் வானவில் தோன்றுகிறது. அப்போது சியு ச்சாய்கொவில் நடந்துசென்றால் மனிதருக்குப் பொய்த் தோற்றம் தோன்றக் கூடும். அதாவது, எங்கு வானம்?எங்கு பூமி?என்பது தெரியாத ஒரு காட்சி தென்படும் என்றார் யெவொன்.


1  2