லிங்லிங் என்பது மிகவும் வயதான சீனப்பெண்புலியின் பெயர். 20 வயதான இந்தப் பெண்புலிக்கு வலது கண்ணில் ஒரு கட்டி வளர்ந்து வருகிறது. இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்று கால்நடை மருத்துவர்கள் கருதுகின்றனர். லிங்லிங் சீனப்பெண்புலி தற்போது சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குயிச்சோவ் மாநிலத்தலைநகர் குயியாங் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சீனப்புலி என்ற பேரினத்தில் இருந்துதான் சைபீரியப்புலி இனம் தோன்றியது. உலகில் அழியும் அபாயத்தில் உள்ள 10 பிராணி வகைகளில் சீனப்புலியும் ஒன்று என மதிப்பிடப்பட்டுள்ளது. இன்று காடுகளில் 30 சீனப்புலிகள்தான் உள்ளன. அதேவேளையில் 60 சீனப்புலிகள் சீனமிருகக்காட்சி சாலைகளில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. இவற்றை நன்கு பேணிக்காத்து பராமரிக்காவிட்டால் 2010 ஆம் ஆண்டுக்குள் எல்லா சீனப்புலிகளும் அழிந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் லிங்லிங் சீனப்பெண்புலிக்கு புற்றுநோய் என்ற செய்தி மிருகவியல் ஆர்வலர்களிடையே கலக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. லிங்லிங் பெண்புலி 1985 ஆம் ஆண்டு மே திங்கள் ஷாங்கை மாநகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பிறந்தது. அதே ஆண்டில் குயியாங் மிருகக்காட்சி சாலைக்கு எடுத்துவரப்பட்டது. இந்த பெண்புலி நோயில் விழுவதற்கு முன்பு 150 கிலோகிராம் எடை இருந்தது. 5 கிலோ இறைச்சியை ஒரே தடவையில் விழுங்கிவிடும் திறன் பெற்றிருந்தது.இப்போதோ இந்தப்புலியின் எடை வெறும் 90 கிலோ மட்டுமே. ஏனென்றால் இப்போது எல்லாம் இந்த சீனப்பெண்புலிக்கு பசிப்பது இல்லை.
1 2
|