லிங்லிங் சீனப்பெண்புலிக்கு நோய்கண்டது இது முதல்தடவை அல்ல. முதலில் 2001 ஆம் ஆண்டில் அக்டோபரில் இதன் எச்சில் சுரப்பிகளில் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது. உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் அந்தக்கட்டி அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. 5 திங்கள்கள் கழித்து 2002 மார்ச்சில் மற்றொரு கட்டி தோன்றியது. அதனால் புலிக்கு ரத்தவாந்தி எடுத்தது. குயியாங் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அறுவைசிகிச்சை நிபுணர் மா ஹோங் ஒரு அறுவைசிகிச்சை செய்து அந்தக்கட்டியை அப்புறப்படுத்தினார். இப்போது புலியின் வலது கண்ணில் ஏற்பட்டுள்ள புற்றுநோய்க்கட்டியை அறுவைசிகிச்சை மூலம் அகற்ற முடியுமா என்பது பற்றியும்.,இதனால் உயிருக்கு தீங்கு ஏற்படுமா என்பது பற்றியும் மேலும் ஆய்வுகள் நடத்தவேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இப்போது லிங்லிங் சீனப்பெண்புலிக்கு மிருகக்காட்சி சாலையில் 4 அறைகள் உள்ள கூண்டு தரப்பட்டுள்ளது. தூய்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த நான்கு அறைகளில் மாற்றி மாற்றி புலி வசிக்கிரது. தவிரவும், வெய்யில் காய்வதற்காக புலி ஒடியாடி விளையாட தனியாக ஒரு திடலும் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது தினமும் கோழி, பன்றி மற்றும் மாட்டு இறைச்சியோடு , கட்டியைக கரைக்கும் மருந்துகலும் தரப்படுகின்றன. குயியாங் மிருகக்காட்சி சாலையில் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாகிவிட்ட லிங்லிங் பெண்புலிக்கு தினமும் உணவுக்கும் மருந்துக்கும் மட்டும் 100 யுவானுக்கு மேல் செலவிடப்படுகிறது.
பொதுவாக காட்டில் வசிக்கும் சீனப்புலி 13 ஆண்டுகள் வரைதான் உயிர்வாழ முடியும்.. மிருகக்காட்சிசாலையில் வைத்து உரியமுறையில் பராமரித்தால் 20 ஆண்டுகள் வரை வாழலாம். லிங்லிங் பெண்புலி நோய்நொடிகளுடன் 20 ஆண்டுகள் வரை தாக்குப்பிடித்து வாழ்ந்துவிட்டது. இன்னும் பல்லாண்டுகள் இந்தப் புலி வாழ எல்லோரும் வேண்டுவோம். 1 2
|