
கடல் மட்டத்திலிருந்து 2000 முதல் 4300 மீட்டர் உயரமுடைய ச்சியு ச்சாய்கொவ் ஸ்ச்சுவான் மாநிலத்தின் வடப்பகுதியில் அமைந்துள்ளது. அதன் பரப்பளவு, 720 சதுர கிலோமீட்டராகும். இவ்விடத்திலுள்ள ஏரிகளும், அருவிகளும் மிகவும் குறிப்பிடத்தக்க காட்சிகளாகும். அங்கு, மொத்தம் 114 எரிகளும் 17 அருவிகளும் உள்ளன. எரி நீர் நீல நிறத்தில் தெளிவாக இருக்கின்றன. நீரிலுள்ள படிவுகளும் பாசிகளும் சூரிய ஒளியில் பச்சை பசேலென மிளிர்கின்ரன. ச்சியெ ச்சாய்கொவ் மலைகளிடையில் பதிக்கப்பட்ட பச்சை மாணிக்கம் போல், காட்சியளிக்கின்றது. முன்பு அங்கு 9 திபெத் இன சிற்றூர்கள் இருந்தன. அங்குள்ள வீடுகளுக்கு எதிரில் துணி கொடிகள் பறந்தன. அக்காட்சிகளை மேலும் சிறப்புற பேண, திபெத் வாழ் மக்கள், படிப்படியாகக் காட்சியிடங்களிலிருந்து குடிபெயர்ந்தனர். உள்ளூர் வாழ் மக்களால் ஹெய்சி என அழைக்கப்படுகின்ற 108 பச்சை கடல்கள், இவ்விடத்து காட்சியிடங்களில் தனிச்சிறப்புடையன வாகும்.

உண்மையில், அவை, உயரமான மலை பள்ளத்தாக்குகளில் உள்ள பச்சை நிற ஏரிகளாகும். ச்சியு ச்சாய்கொவுக்கு அருகில் கடல் மட்டத்திலிருந்து நாலாயிரம் மீட்டர் உயர்வுடைய மலைகள் உள்ளதால், பள்ளத்தாக்குகளுக்கிடையில் சிறிய பெரிய ஏரிகளும் அருவிகளும் உருவெடுத்துள்ளன. தொலைவிலிருந்து ஏரிகளைப் பார்க்கும் போது, தெளிந்து நீர் தென்படுகின்றது. ஏரிகளுக்கடியில், புல், மரத்துண்டு மற்றும் மரக் கிளைகள் பெரும் அளவில் படிந்துள்ளமை தெளிவாக தெரிகின்றன. தவிர, சுண்ணாம்புக்கங்களால் உருவான மஞ்சள் நிற பளிந்கு பொருட்களும் அதிகமாக தென்படுகின்றன. இதனால், சூரிய ஒளியில் ஏரி நீர், நீலம், பச்சை, ஊதா, மஞ்சள் உள்ளிட்ட வேறுபட்ட நிறங்களில் மிளிர்கின்றது. எனவே, வண்ண ஏரி என மக்கள் இவற்றுக்கு பெயர் சூட்டியுள்ளனர். மேற்கூறிய 108 ஏரிகளில், சாங்ஹெய் எனப்படும் நீள கடல் மிகவும் பெரிய ஒன்றாகும். இது, கடல் மட்டத்திலிருந்து மூவாயிரம் மீட்டர் உயரத்தில் உள்ளது.
1 2
|