• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-20 14:53:54    
ச்சியு ச்சாய்கொவ்

cri

இந்த ஏரி, 7 கிலோமீட்டர் நீளமும், 9 லட்சத்து 20 ஆயிரம் சதரமீட்டர் பரப்பளவும் கொண்டது. கன்னிக்காடுகளிடையில் கிடக்கும் மலைகள், இதனைச் சுற்றிவளைக்கின்றன. ஏரி நீர், காடுகள், நீல நிற வான் வெள்ளை மேகும் ஆகியவையும் மலைகளும் ஒன்று சேர்ந்து எழிலான ஓவியம் ஒன்றை உருவாக்குகின்றன. கண்ணாடிக் கடல் எனப்படும் ச்சிங் ஹாய் சிங்ஹாய் கடலும் புகழ்பெற்ற காட்சிச்சிறப்பிடமாகும். இங்குள்ள ஏரி நீர், சலனம் ஏதுமின்றி கண்ணாடி போல் தெளிவாக உள்ளது. ஏரிக் கடியிலுள்ள கல் மற்றும் தாவரங்களைத் தெளிவாகப் பார்க்க முடியும். சியெசு அதாவது கூரிய மூங்கில் கடலும் குறிப்பிடத்தக்க ஒன்று. பாண்டா, தகூறிய மூங்கிலை முக்கிய இரையாக உட்கொள்கின்றது. இங்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள், கூரிய மூங்கிளைத் தின்னும் பாண்டாவைக் காணலாம். ச்சியு ச்சாய்கொவின் அருவிகளில், முத்து மணற்திடல் என்பது, தலைசிறந்ததாகும். அருவியின் உச்சியில், அகலமான கல்பாறை சரிந்துகிடக்கின்றது. நீரோட்டம், விரைவாக இருக்கும் அருவிக்கடியில், இளம் மஞ்சள் நிற மணல் காணப்படும். இது, சூரிய ஒளியில் தரையில், முத்து கிடப்பது போல் தென்படும். இதனால், முத்து மணற்திடல் எனஅற பெயர் பெற்றது. இவ்வருவியின் நீர் எப்பொழுதும் சில்லொன்று குளிர்ச்சியாக இருக்கும். ச்சியு ச்சாய்கொவுக்குச் செல்வோர் ஒவ்வொருவரும் அருவியைப் பார்க்கத் தவறக்கூடாது. ச்சியு ச்சாய்கொவின் அடையாளமாகத் திகழ்வதே இதற்குக் காரணமாகும். லுரலான் எனும் இடம் காட்சிச்சிறப்பிடத்தின் மையப்பகுதியில் அமைகின்றது. இது, திபெத் மொழியில் கம்பீரம் எனப் பொருள்படுகின்றது. அருவி நீர், லுரலான் வந்தடைந்து, பள்ளத்தாக்கில் விழுந்த பின் பரவலாகப் பரவி, மாபெரும் திரையாகக் காட்சியளித்து, பச்சை கடல்களுக்கும் உயர் மலைகளுக்குமிடையில் தொங்குவது போல், சல சலவென்ற ஒலி எழுப்புகின்றது.

சுச்சன் அருவிப்பகுதியில், மரங்கள் மிகவும் அதிகம். அருவியின் உச்சியிலும் நீரிலும் நிறைய மரங்கள் வளற்கின்றன. மரங்களிடையே நீரோட்டம் உள்ளது. இம்மரங்கள் நீரோட்டத்தில் எவ்வாறு வளர்கின்றன என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியவில்லை. ச்சியு ச்சாய்கொவுக்குச் சுற்றுலா மேற்கொள்ள மிகச் சிறந்த காலம், இலையுதிர்காலமாகும். இக்காலத்தில் தட்பவெட்ப நிலை மிதமாக இருக்கும். மலர்கள் மலர்ந்திருக்கும். வழியில், ச்சியாங் இனமும் திபெத் இனமும் வாழும் பிரதேசங்களுக்கூடாகச் செல்கையில், ச்சியு ச்சாய்கொவின் எழிலான காட்சிகளைக் கணஅடுகளிக்கும் அதே வேளையில், தேசிய இன மணம் கவழும் பழக்க வழக்கங்களையும் பார்வையிடலாம்.


1  2