• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-21 07:42:49    
சீனாவின் சிலிகான் பள்ளத்தாக்கு

cri

பெய்ஜிங்கின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ZHONG GUAN CUN, சீனாவின் "சிலிகான் பள்ளத்தாக்கு"எனப்படுகிறது. இது, சீனாவின் உயர் அறிவியல் தொழில் நுட்ப திறமைசாலிகள் குழுமியுள்ள இடம் மட்டுமல்ல, சீனாவின் புகழ்பெற்ற உயர் அறிவியல் தொழில் நுட்ப சின்னங்களுக்கான தொட்டிலுமாகும்.

10 ஆண்டுக்கால வளர்ச்சி மூலம், ZHONG GUAN CUN னின் தொழில் துறை, அபார வளர்ச்சி கண்டுள்ளது. கணிணி உற்பத்தி பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையிலிருந்து, மின்னணு தகவல் தொழில் துறைக்கு அது மாறியுள்ளது. முக்கியமாக, புதுமை அரை உற்பத்தி பொருள், உயிர் அறிவிய்ல, புதுமை மருந்து ஆகியவற்றுடன் இணைந்த உயர் அறிவியல் தொழில் நுட்ப பரவலாக மாறியுள்ளது. 1990ம் ஆண்டுகளின் இறுதியில், ZHONG GUAN CUN அறிவியல் தொழில் நுட்ப மண்டலத்தை, சீன அரசு, நிறுவியது.

அது நிறுவப்பட்டதற்கு பிந்திய வளர்ச்சி நிலைமை பற்றி, அதன் நிர்வாக கமிட்டியின் துணை இயக்குநர் LIU GUI LIN கூறியதாவது:

1999ம் ஆண்டில், அரசவை ஒப்புதல் அளித்த போது, இம்மண்டலத்தின் தொழில் நுட்ப வர்த்தகத்தின் மொத்த வருமானம், சுமார் 8000 கோடி யுவானாகும். கடந்த ஆண்டின் இறுதியில், அது, 24000 கோடி யுவானை எட்டியுள்ளது என்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளில், அடிப்படை வசதியின் கட்டுமானத்தை, ZHONG GUAN CUN, பெருக்கியதால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், 100 கோடி யுவானுக்கு மேலான முதலீடு, நிறைவடைந்துள்ளது. மென்பொருள் மண்டலம், உயிர் அறிவியல் மண்டலம் உள்ளிட்ட முக்கிய திட்டப்பணிகள், அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, நாடு திரும்பிய திறமைசாலிகள் லட்சியத்தைத் துவங்கும் மண்டலம், "இன்குபேடர்"எனும் அடைகாப்பு கருவி ஆகியவற்றின் கட்டுமானம், நிறைவேறியதால், ZHONG GUAN CUN மண்டலத்தில் முதலீட்டுச் சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, நாடு திரும்பிய திறமைசாலிகள் இங்கு திறந்துள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, சுமார் 1700 ஆகும். கடந்த சில ஆண்டுகளில், நாள் ஒன்றுக்கு சராசரியாக இரண்டு இத்தகைய தொழில் நிறுவனங்கள் இங்கு துவங்கப்பட்டன. ZHONG GUAN CUN னில் லட்சியத்தைத் துவக்கிய நாடு திரும்பியோர்கள் பலர், வெற்றிபெற்றுள்ளனர்.

அத்துடன், ZHONG GUAN CUN, உலக புகழ்பெற்ற அந்நிய தொழில் நிறுவனங்களை ஈர்த்துள்ளது. தற்போது, உலகின் 500 மிகவும் பெரிய தொழில் நிறுவனங்களில், MICROSOFT, PANASONIC,IBM உள்ளிட்ட சுமார் 50 தொழில் நிறுவனங்கள், இம்மண்டலத்தில், கிளை நிறுவனம், ஆய்வு மற்றும் வளர்ச்சி மையம் ஆகியவற்றை நிறுவியுள்ளன.

NOVOZYMES தொழில் நிறுவனம், உயிரின தொழில் நுட்ப கலந்தாய்வில் ஈடுபட்டுள்ளது. 1994ம் ஆண்டு, இது, சீனாவில் முதலீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, ZHONG GUAN CUN அறிவியல் தொழில் நுட்ப மண்டலத்தில் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தை நிறுவியுள்ளது.

1  2