இது குறித்து, ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தின் தலைவர் OU YANG AN கூறியதாவது:
QING HUA பல்கலைக்கழகம்,பெய்ஜிங் பல்கலைக்கழகம் உள்ளிட்ட புகழ்பெற்ற சீனாவின் பல்கலைக்கழகங்கள், இப்பிரதேசத்தில் அமைந்துள்ளன. இங்கு ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தை நிறுவுவதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்தப் பல்கலைக்கழகங்களுடன் நெருக்கமாக பரிமாறிக்கொள்ளலாம். இரண்டு, சிறப்பு திறமைசாலிகளைப் பெறலாம் என்றார் அவர்.
கடந்த இரு ஆண்டுகளில், பெய்ஜிங்கிலுள்ள NOVOZYMES யின் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையம், பணியமர்த்தம் செய்த பணியாளர்களில் பெரும்பாலோர், ZHONG GUAN CUN பிரதேசத்திலுள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர் ஆவார் என்று, 欧阳安 கூறினார்.
ZHONG GUAN CUN னில் அமைந்துள்ள உயிராற்றல் வாய்ந்த 10 ஆயிரத்துக்கு மேலான தொழில் நிறுவனங்களில், LENOVO,FOUNDER,TSINGHUA TONGFANG முதலியவை, சீனாவின் உயர் அறிவியல் தொழில் நுட்பத்தில் புகழ்பெற்ற சின்னமாக மாறியுள்ளன. சீன சந்தையில், அவை மாபெரும் செல்வாக்கு பெற்றுள்ளன. ZHONG GUAN CUN அறிவிய்ல் மற்றும் தொழில் நுட்ப மண்டலத்தின் மென்பொருள் ஆய்வு, ஒருங்கிணைந்த மின் சுற்று அமைப்பு, செல்லிட செய்தித்தொடர்பு, கணிணி ஆகியவற்றின் அளவும், சந்தை விழுக்காடும் சீனாவில் முதலிடம் பெற்றுள்ளன.
இப்பிரதேசத்தின் எதிர்காலவளர்ச்சி குறித்து, நிர்வாக கமிட்டித் துணை இயக்குநர் LIU GUI LIN கூறியதாவது:
ZHONG GUAN CUN னில் முதலீடு செய்யும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, நாங்கள் சீரான சூழலை வழங்கவுள்ளோம். தற்போது, உலகின் 500 மிக பெரிய தொழில் நிறுவனங்களில் சுமார் 50 தொழில் நிறுவனங்கள், இங்கு இடம்பெற்றுள்ளன. எதிர்காலத்தில், மேலும் கூடுதலான பெரிய தொழில் நிறுவனங்களை ஈர்த்து, ZHONG GUAN CUN மண்டலத்தின் கட்டுமானம் மற்றும் வளர்ச்சியில் பங்காற்றவிருப்பதாக, LIU GUI LIN தெரிவித்தார். 1 2
|