• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-21 22:34:30    
சீனாவின் சிறுபான்மை தேசிய இன ஊழியர்கள்

cri

தேசிய இன ஊழியரையும் சிறப்பு தொழில்நுட்ப வல்லுநரையும் பயிற்றுவிப்பதற்காக கல்வி முறைமை தற்போது சீனாவில் உருவாயிற்று. தேசிய இன ஊழியர் சிறப்பு இடைநிலை பள்ளி, தேசிய இன தொழில்நுட்பப் பள்ளி, பல்வேறு நிலை தேசிய இனக் கல்லூரிகள் உள்ளிட்ட 100க்கும் அதிகமான தேசிய இனக் கல்வி கல்லூரிகள் இம்முறைமையில் அடங்கும். தேசிய இனப் பிரதேசங்களுக்கென, இப்பள்ளிகள், பெரும் எண்ணிக்கையிலான சிறுபான்மை தேசிய இன ஊழியர்களையும் பல்வேறு நிலை வெவ்வேறான சிறப்புத்தொழில் வல்லுநர்களையும் பயிற்றுவித்துள்ளன. தேசிய இனப் பிரதேசத்தின் பொருளாதார கட்டுமானம், மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு அவை மிகப்பெரும் பங்கையாற்றியுள்ளன.

தற்போது, சிறுபான்மை தேசிய இன ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணி, முக்கியமாக, குறுகிய கால பயிற்சி எனவும், கல்வித்தகுதிக்கான நீண்டகால கல்வியூட்டுதல் எனவும் இரண்டு வகைப்படுகின்றது.

மத்திய தேசிய இன பல்கலைக்கழகத்து தேசிய இன ஊழியர் பயிற்சி துறையின் தலைவர் ஜிங் ஜின் சென் குறுகிய கால பயிற்சியின் தனித்துவம் பற்றி எடுத்துக்கூறியதாவது:

"தேசிய இனப் பிரதேசத்தில் குறிப்பிட்ட சில தொழில்களும் குறிப்பிட்ட சில வாரியங்களும், அவற்றின் ஊழியர்களின் அறிவை உயர்த்துவதென்ற தேவைக்கு ஏற்ப, குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகின்றது. இத்தகைய வகுப்பு, மூன்று திங்களுக்குள் நிறைவடையும். பாடநூல், உள்ளூர் அரசுடன் கலந்தாய்வு மேற்கொண்ட பின் உறுதிப்படுத்தப்பட்டது. ஊழியர்கள் நன்றாக படிக்கின்றனர். தேசிய இனப் பிரதேசமும் மனநிறைவு தெரிவித்துள்ளது" என்றார், அவர்.

1  2