• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-25 13:06:08    
வெற்றிகரமான முதலாவது பரிசோதனை

cri
சீனாவில் 2003ம் ஆண்டு வசந்த காலத்தில் சார்ஸ் நோய் தாக்கியது. கடுமையான மூச்சுத் திணறலையும் இருமலையும் காய்ச்சலையும் உண்டாக்கி உயிரைக் கொல்லும் இந்த நோயினால் அப்போது சீனப் பெருநிலப் பகுதியில் 5327 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆவர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 349 பேர் உயிரிழந்தனர். இதனால் உலகெங்கும் பீதிபரவியது. மக்கள் பலரும் முகமூடி அணிந்தபடி நடமாடினார்கள். ஒருவர் இன்னொருவருக்கு அருகில் சென்று பேசுவதற்கே பயப்பட்டனர். பல நாடுகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அண்டை நாடுகளான தாய்லாந்து இந்தோனேசியா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் பிரதேசத்தின் நிர்வாகங்கள் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இப்படிப்பட்ட நிலையில் சீனா சும்மா இருக்கவில்லை. இந்தப் பயங்கரமான நோய் பரவாமல் தடுக்க என்னென்ன

நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று சிந்திக்க தொடங்கியது. பல அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பெய்சிங்கில் அமைந்துள்ள SINOVAC BEIJING என்ற நிறுவனம் ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தது. கடந்த ஆண்டு மே திங்கள் 22ம் நாள் இந்தத் தடுப்பூசி மருந்து 36 தன்னார்வத் தொண்டர்களின் உடம்பில் செலுத்தி முதல் கட்ட மனித உடம்பு பரிசோதனை நடத்தப்பட்டது. டிசம்பர் திங்களுக்குள்ளாக இந்தக் தொண்டர்களின் உடம்பில் பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாத கிருமிக் கொல்லிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இப்போது SINOVAC BEIJING நிறுவனத்தின் ஆய்வுக் கூடத்தில் செயலற்ற தடுப்பூசி மருந்துகளின் பல தொகுதிகள் உள்ளன. இவற்றிலே ஒன்று ரசாயன நுட்பம் மூலம் கொல்லப்பட்ட கிருமிகளில் இருந்து உருவாக்கப்பட்டது. இந்தத் தடுப்பூசி மருந்து பயன்மிக்கது என்று முதல் நிலையில் நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும் மக்களுக்கு இதை விற்பனை செய்ய முடியாது.
1  2