• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-25 13:06:08    
வெற்றிகரமான முதலாவது பரிசோதனை

cri

இயற்கையாகப் பரவக் கூடிய சார்ஸ் கிருமிகளை எதிர்த்துப் போராடுவதில் இந்தத் தடுப்பூசி மருந்து எந்த அளவுக்குப் பயனுள்ளது என்பது மூன்றாவது சுற்று மானுடப் பரிசோதனையில் தேறிய பிறகே மக்களுக்கு வழங்கப்படலாம் என்று SINOVAC BEIJING நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் இன் வெய் பின் கூறினார்.

ஆனாலும் சார்ஸ் நோய் திடீரென பெருமளவில் பரவுமானால் இந்த நோயினால் தாக்கப்படக் கூடிய இடர் அதிகமாக உள்ள மருத்துவர்கள் போன்ற பிரிவினருக்கு இந்தத் தடுப்பூசி மருந்தை உடம்பில் செலுத்தலாம். இரண்டாவது மூன்றாவது சுற்று பரிசோதனை முடிவதற்காக் காத்திருக்கத் தேவையில்லை என்று பெய்சிங்கில் உள்ள சீன ஜப்பான் நட்புறவு மருத்துவமனையின் மருத்துவர் லின் ஜியாங்ட்டோ கூறினார்.

இரண்டாவது சுற்றுப் பரிசோதனைக்கு இன்னமும் தேதி குறிக்கப்பபட வில்லை.மூன்றாவது சுற்றுப் பரிசோதனைக்கு நூற்றுக் கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் தேவை என்றும் அவர் கூறினார். மேலும் ஏற்கனவே ஒரு முறை பரிசோதனைக்காக இந்த தடுப்பூசி மருந்தை உடம்பில் செலுத்தியவர்கள் மீது மீண்டும் செலுத்த முடியாது. விலங்குகள் மீது இந்த தடுப்பூசி மருந்தை செலுத்திய பரிசோதித்ததில் தடுப்பூசி மருந்தால் உருவாகும் கிருமிக் கொல்லிகள் பயனுள்ளவை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் எந்த ஒரு புதிய தடுப்பூசி மருந்துமே அதன் வீரியம் நிரூபிக்கப்படும் வரை நோய்த் தொற்று பெரிய அளவில் பரவும் போது பல அபாயங்களை ஏற்படுத்தக் கூடும். சிறப்பாக முதல் சுற்று பரிசோதனைக்காக உடம்பில் செலுத்தப்பட்டவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம். ஆகவே அவர்களின் ரத்தத்திலும் உண்புற உடல் உறுப்புகளிலும் நோய்த் தடுப்பு மருந்து செலுத்திய பிறகு என்னென்ன எதிர்விளைவுகள் ஏற்படுகின்றன என்பது உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றது.

2004 மேதிங்கள் 22ம் நாளன்று லான் வான் லி என்பவரின் உடம்பில் தான் முதலில் சார்ஸ் நோய்த் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. அவர் எவ்வித அபாயமும் இன்றி பக்கவிளைவுகளும் இன்றி 210 நாட்களைக் கழித்துவிட்டார். அவருடைய உடம்பில் 14 மருத்துவ மனை ஆய்வுகளும் பல ரத்த பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. மேலும் சரார்ஸ் கிருமியைத் தாக்குப்பிடிக்கக் கூடிய எதிராற்றல் அவருடைய உடம்பில் வளர்ந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. எந்த ஒரு நோய்த் தடுப்பு மருந்தின் வீரியத்தையும் மதிப்பிடுவதற்கு 210 நாட்கள் அவருடைய உடல் நிலை கண்காணிக்கப்பட வேண்டும் என்று அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். முதல் தொகுதியில் கடைசியாக தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவரின் உடல் நிலை வருகின்ற மார்ச் திங்கள் இரண்டாம் நாள் கண்காணிக்கப்படும். இதுவும் வெற்றிகரமாக அமைந்து விட்டால் இரண்டாவது சுற்று பரிசோதனை தொடங்கப்படும். ஆகவே மலர்கள் பூத்துக் குலுங்க்க கூடிய வசந்த காலம் வரும் போது சார்ஸ் நோய்க் கிருமிகளும் மீண்டும் வந்து விடுமோ என்று பயப்படத் தேவை இல்லை. அப்படியே வந்தாலும் பயமில்லை.


1  2