• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-28 18:52:50    
தேசிய இனப்பிரதேசத்துப் பொருளாதார வளர்ச்சி

cri

பெய்சிங்கின் பல்வேறு பெரிய அங்காடிகளில், இ லி, மங் நியங் என்ற தொழில் சின்னம் படைத்த பால் பொருட்கள் நுகர்வோரின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. வடக்கு சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தில் அவை தயாரானவை என்பது அறியத்தக்கது. புள்ளிவிவரங்களின் படி, இ லி குழுமத்தின் பால் பவுடர், ஐஸ் கிரீம் முதலியவை அடுத்தடுத்து பல்லாண்டுகளாக உற்பத்தி அளவில் சீனாவில் முதலிடம் வகிக்கின்றது. 2003ம் ஆண்டு, இக்குழுமத்தின் வருமானம் 600 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. சீனப் பால் உற்பத்தித்தொழிலில் அதன் விற்பனை மூல வருமானம் முதலிடத்தில் உள்ளது என்று அதன் தலைமை இயக்குநர் செங் ஜிங் வேய் செய்திமுகவருக்கு அளித்த பேட்டியில் கூறினார். உள்மங்கோலிய புல்வெளியில் தொழிலைத் துவக்கிய இ லி குழுமம், 20 ஆண்டுகால வளர்ச்சி வரலாறுடையது. அதன் வளர்ச்சியும் வலுவும், உள்ளூர் பொருளாதாரத்தின் வளர்ச்சியை பெரிதும் முன்னேற்றுவித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"கடந்த சில ஆண்டுகளில், விவசாயத்துறையைத் தொழிலாக்குவதில் இ லி குழுமம், ஆக்கப்பூர்வ உந்து விசை பங்கை ஆற்றியுள்ளது. 30 லட்சம் பால் தயாரிப்பாளர் வறுமையிலிருந்து விடுபட்டு வளமடைந்துள்ளனர். அன்றி வேலை வாய்ப்புத்துறையும் வளர்ந்துள்ளது. ஆண்டுதோறும் எங்கள் குழுமம், அரசுக்கு கோடிக்கணக்கான யுவான் தொகையை வரியாகச் செலுத்துகின்றோம்." என்றார், அவர்.

1  2