
சீனாவில், கால் நடை வளர்ப்புத் தொழில் வளர்ச்சியடைந்த பிரதேசங்களில் ஒன்றான உளமங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் பால் தயாரிப்பு பொருள் தொழிலின் மலர்ச்சியினால், லட்சக்கணக்கான விவசாயிகளும் ஆயர்களும் மிகப்பெரும் நன்மை பெற்றுள்ளனர். பால் பொருள் தயாரிப்பு தொழில் நிறுவனங்களின் உந்து விசையுடன், கிழக்கே மேற்காக செல்லும் 2000 கிலோமீட்டர் நீளமுடைய பிரதேசத்தில், கறவை பசு வளர்ப்பு மண்டலம் உருவாகி வருகின்றது. விவசாயிகளும் ஆயர்களும் ஆண்டுக்காண்டு கூடுதலான வருமானம் பெறும் ஊற்றுமூலமாக இது திகழ்கின்றது.

சீனாவின் இதர தேசிய இன தன்னாட்சிப் பிரதேசங்களில், பெரிய நடுத்தர தொழில் நிறுவனங்கள், உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு உயிராற்றலை அளித்துள்ளன. சிங்கியாங் விகுர் தன்னாட்சிப்பிரதேசத்தில், முந்திரிகை மதுபானம் தயாரிப்பு ஆலை, திபெத் பிரதேசத்து திபெத்தின் மருந்தாக்க ஆலை முதலியவற்றின் ஆண்டு விற்பனை மதிப்பு, பத்து கோடி யுவானாகும். இத்தொழில் நிறுவனங்கள், உள்ளூர் மூலவளத்தை மேம்பாடாக பயன்படுத்தி, அவற்றின் உற்பத்தி அளவை விரிவாக்கும் அதே வேளையில், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானத்தையும் அதிகரித்துள்ளன.
தற்போது, சீனாவின் தேசிய இனப்பிரதேசங்களில், மேம்பாடுடைய உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வலுவான போட்டியிடும் ஆற்றல் படைத்த பெரிய நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொகுதியாக வளர்ந்துள்ளதை, புள்ளிவிவரம் காட்டுகின்றது. உயரிய அறிவியல் தொழில்நுட்பத்தொழில் நிறுவனம், பாரம்பரிய செய்தொழில் நிறுவனம், சிறுபான்மைத் தேசிய இனத் தனிச்சிறப்பியல்புடைய பொருட்களைத் தயாரிக்கும் தொழில் நிறுவனம் முதலியவை, அவற்றில் அடங்கும். 1 2
|