• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-01 12:03:06    
சிறப்பு விமான மூலம் நேரடி பறத்தல்

cri

 

அண்மையில் சீனாவின் வசந்த விழாவை கொண்டாடும் வகையில் இரு கரைகளுக்கிடையிலான நேரடி விமான போக்குவரத்து பற்றி குறிப்யிடப்பட்டுள்ளது. உண்மையிலேயே சிறப்பு விமான வழியில் நிற்காமல் நேரடி பறத்தல் என இதற்குப் பொருள்? இது பற்றி விளக்கலாமா என்று பெய்சிங் நேயர் வான் கேட்கிறார்.

சீனாவின் தைவான் நீரிணையின் இருகரைகளுக்கிடையில் நேரடி விமான போக்குவரத்து இல்லாத போது சீனாவின் பாரம்பரிய விழாவான வசந்த விழாவைக் கொண்டாடும் வகையில் சீனப் பெரு நிலப் பகுதியில் பணிபுரிகின்ற சில லட்சம் தைவான் வணிகர்கள் ஹாங்காங் மற்றும் மகௌ வழியாக தைவானுக்கு விமானப் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதில் நேரமும், நிதியும் வீணாகின்றது. விமான சீட்டு கிடைப்பதில் நெருக்கடி உண்டாகி மக்களுக்குத் தொல்லை ஏற்படுகின்றது. இதற்காக 2002ம் ஆண்டு அக்டோபர் திங்களில் தைவானின் கோமிங்தான் கட்சி சட்டமியற்றல் கமிட்டியின் உறுப்பினர் சான் சியோ யென் வசந்த விழா நாட்களில் குறிப்பிட்ட பயணிகளுக்காக தைவான் தீவில் உள்ள விமானங்கள் ஷாங்காயிலிருந்து தைபேக்கு வணிகர்களை ஏற்றிச் சென்று அனுப்ப வேண்டும் என்று யோசனை முன்வைத்தார். இது தான் சிறப்பு விமான மூலம் நேரடி பறத்தல் என்பதாகும்.

குறிப்பிட்ட இடம் என்றால் விமானம் தைவானிலும் சீனப் பெருநிலப் பகுதியிலும் உள்ள குறிப்பிட்ட நகரங்களுக்கிடையில் பறக்க வேண்டும். எடுத்துக்காட்டாக 2003ம் ஆண்டு ஜனவரி திங்களில் சிறப்பு விமான மூலம் நேரடி பறத்தல் முதன் முறையாக நடைமுறைக்கு வந்தது. தைவான் விமானங்கள் தைபேயிலிருந்து ஹாங்காங், மகௌ வழியாக ஷாங்காய் சென்று பின் ஒரே வழியாக திரும்ப வேண்டும். 2005ம் ஆண்டில் ஷாங்காய் தவிர சிறப்பு விமானங்கள் பெய்சிங், குவாந்சோ முதலிய இடங்களை அதிகரிக்க சீனப் பெருநிலப் பகுதி வாக்குறுதி அளித்துள்ளது. தைபேய், கோச்சியுன் தவிர தைச்சுன் உள்ளிட்ட மற்ற இடங்களை தைவான் அதிகரிக்க வேண்டும் என்று சீனப் பெருநிலப் பகுதி விருப்பம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட நேரம் என்றால் வசந்த விழா நாட்கள் பற்றி குறிப்பிடுகின்றது. தவிர, இந்த நடவடிக்கையின் மூலம் வரும் நாட்களில் சந்திர நாட்காட்டியின் படி நிலா நாளுக்கான சிறப்பு விமான பறத்தல், சின்மின் பண்டிகை அதாவது ஏப்ரல் திங்கள் நாலாம் நாள் இறந்தவரிடம் துக்கம தெரிவிக்கும் நாளுக்கான சிறப்பு விமான பறத்தல் முதலியவற்றை நடத்த வேண்டும் என்று சான் சியோயென் விருப்பம் தெரிவித்தார்.
1  2