• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-01 12:03:06    
சிறப்பு விமான மூலம் நேரடி பறத்தல்

cri
 குறிப்பிட்ட ஆட்கள் என்றால் குறிப்பிட்ட மக்கள் இந்த சிறப்பு விமானங்களின் மூலம் பயணம் செய்ய முடியும். 2003ல் தைவான் வணிகர்கள், தைவான் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களில் தைவான் மாணவர்கள் சேர்க்கப்பட வில்லை. இவ்வாண்டு, இருகரைகளின் கலந்தாய்வு அடிப்படையில் சீனப் பெருநிலப் பகுதியில் வாழ்கின்ற அனைத்து தைவான் மக்கள் தைவான் சகநாட்டவர் என்ற அட்டையை கொண்டு இந்த சிறப்பு விமான மூலம் தைவானுக்குச் சென்று திரும்பலாம் என்று சான் சியோ யென் தெரிவித்துள்ளார்.

"சிறப்பு விமான மூலம் பறத்தல்"என்பது உண்மையான நேரடி பறத்தல் இல்லை. உண்மையான பறத்தலானது மூன்றாவது இடத்தில் இறங்காமல் நேரடியாக தைவானிலிருந்து சீனாவுக்கு செல்வதாகும். 2003ல் சிறப்பு விமான போக்குவரத்தின் போது ஹாங்காங் மற்றும் மகௌ வழியாக விமான நிலையங்களில் இறங்கி செல்ல வேண்டியிருந்தது. இவ்வாண்டு இதில் புதிய மாற்றம் காணப்பட்டுள்ளது. சான் சியோ யென் சொன்னது போல விமானம் ஹாங்காங் மகௌ விமான நிலையங்களில் இறங்காமலேயே சென்று வரலாம். மறுபறம், தைவாண் விமானங்களும் சீனப் பெருநில பகுதியின் விமானங்களும் சிறப்பு விமான போக்குவரத்தில் ஈடுபடலாம். அதாவது வசந்த விழாவைக் கழிக்க பெருநில பகுதியிலிருந்து தைவான் சக நாட்டவர்களை தைவானுக்கு அனுப்பலாம். திரும்பும் போது அங்குள்ள தைவான் மக்களைக் கொண்டு பெருநிலப் பகுதிக்கு தொண்டு வரலாம். ஆனால் தைவானில் வாழ்கின்ற பெருநில பகுதி மக்களை ஏற்றி அனுப்ப கூடாது. முன்பு தைவான் சிவில் பயணி விமானங்கள் மட்டுமே இந்த சிறப்பு விமான பறப்பில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. அந்த விமானங்கள் பொதுவாக காலியாக சீனப் பெருநிலப் பகுதிக்கு வந்து தைவான் சகநாட்டவர்களை ஏற்றிச் சென்றன.

இரு கரைகள் கலந்தாய்வு செய்து எடுத்த முடிவுக்கு தைவானின் தொடர்புடைய பெலுநில விவகார கமிட்டி இறுதியில் ஒப்புதல் தெரிவிக்க வில்லை. இரு கரைகளின் மக்களும் நெருக்கமாகி பொருளாதார பரிமாற்றமும் நாள்தோறும் நடைபெறவே இது முன்னேற்ற கட்சியின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாகும் என்று அது கவலைப்படுகின்றது.


1  2