
சீன சமூக அறிவியல் கழகத்தின் அறிஞரான Long Yuan Wei, சுவாங் இனத்தவராவார். நீண்டகாலமாக அவர், தேசிய இனப் பிரதேசப் பொருளாதார ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். பணியின் தேவை காரணமாக, சிறுபான்மைத் தேசிய இனங்கள் குழுமி வாழும் பிரதேசங்கள் பலவற்றுக்கு அவர் சென்றிருக்கின்றார். அண்மையில், தம் ஊரான குவாங் சி சுவாங் இன தன்னாட்சிப் பிரதேசத்தின் Bai Se பிரதேசத்துக்குத் திரும்பினார். பெய்சிங்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்துள்ள அவர், எதிர்பாராதது எனவும், அதிர்ச்சி எனவும், அப்போதைய தமது உணர்ச்சியை வருணித்தார். இந்த ஆண்டுகளில், தேசிய இனப்பிரதேசத்தில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"முன்பு இங்கு வறிய பிரதேசம். இப்போது, தொழில்முறையிலும் குறிப்பிட்ட அளவிலும் வேளாண் உற்பத்தி நடைபெறுகின்றது. கண்கொள்ளாத தக்காளித்தோட்டம், பெரிய பெரிய மாங்காய் தோட்டம், 700 ஹெக்டர் பரப்புடைய கரும்புத் தோட்டம், ஆயிரம் ஹெக்டர் காய்கறி தோட்டம் ஆகியவை நிறைய காணப்படுகின்றன" என்றார், அவர்.
சிறுபான்மைத் தேசிய இனப்பிரதேசப் பொருளாதாரம் வளர்ச்சி அடைவது என்பது, மக்களின் வருமானம் அதிகரிப்பதைப் பொறுத்திருக்கின்றது. வரலாற்றில், தேசிய இனப்பிரதேசங்கள் யாவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தன. இப்போது, தேசிய இனப் பிரதேசங்களில் கிராமம் அனைத்திலும், நெடுஞ்சாலை, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி ஆகிய வசதிகள் உள்ளன. மக்களின் வாழ்க்கை உண்மையிலேயே பெரிதும் மாறியுள்ளது" என்று அவர் கருத்து தெரிவித்தார்.
1 2
|