• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-06 00:06:55    
சிங்கியாங் உற்பத்திப்படை

cri

வட மேற்கு சீனாவில் அமைந்துள்ள சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசத்தில் சில சிறப்புத் தன்மைகள் காணப்படுகின்றன. இங்கு ராணுவம், உண்டு. ஆனால் சீருடை அணிவதில்லை. பொருளாதார வளர்ச்சி என்ற முக்கிய கடமைக்கு இந்தப்படை பொறுப்பேற்கின்றது. உள்ளூர் அரசு இல்லாததினால், கல்வி. மருத்துவம் உள்ளிட்ட சமூகப் பணித்துறைகளை ராணுலம் நடத்துகின்றது. சிங்கியாங் உற்பத்திப் படை, இதுவாகும்.

1950ம் ஆண்டுகளின் துவக்கத்தில், அதாவது, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதற்குச் சற்றுப்பினைர், வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள சிங்கியாங் பிரதேசத்தில் பொருளாதாரம், பின்தங்கிய நிலையில் இருந்தது. தவிரவும், எல்லைப் பாதுகாப்பும் சரியாக நிதானமாக இல்லை. இப்பிரதேசத்தின் முக்கியமான நெடுநோக்கு தகுநிலையையும் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் வசதியற்ற போக்குவரத்து நிலைமையையும் கருத்தில் கொண்டு, சிங்கியாங்கில் நிறுத்தப்பட்டுள்ள படையை உற்பத்தி நிர்மாணப்படையாக மாற்றியமைக்க, அப்போதைய மத்திய அரசு முடிவு எடுத்தது. படையினர்கள் எல்லை பாதுகாப்பில் ஈடுபடும் அதே வேளையில், உற்பத்தி பணிகளிலும் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்கள் தங்களது சொந்த தொழிலையும் பார்த்துக் கொள்ள முடிகிறது.

இவ்வாறு ஒரு லட்சத்து 75 ஆயிரம் படைவீரர்களும் அதிகாரிகளும் சீருடைகளைக் களைந்து விட்டு, சாதாரண உடை அணிந்து, சிங்கியாங் திங் சன் மலையின் பாலைவனத்தில் துங்கியிருந்து, நீர்ச்சேமிப்பு திட்டத்தை மேற்கொண்டு தரிசு நிலத்தைப் பண்படுத்தி வயலை உருவாக்கினர். துவக்கத்தில் அவர்களிடம் உற்பத்திக் கருவிகள் இருக்கவில்லை. அவர்கள் போருக்குப் பயன்படும் குதிரைகளை, சாகுபடிக்காக பயன்படுத்தினர். கழிவு இரும்புருக்குகளையும் காலியான துப்பாக்கித் தோட்டாக்களையும் கொண்டு மண்வெட்டி, கலப்பை ஆகியவற்றை உருவாக்கி ஆயிரம் மைல் பரப்புடைய பாலைவனத்தில் சாகுபடி செய்தனர். அப்போதைய சாகுபடி நிலைமை பற்றி, 70 வயதுக்கு மேலான ஹாங் சன் யுன் கூறியதாவது:

"அப்போது, நாங்கள் சாகுபடி செய்த இடத்துக்கு அருகில் மனிதர் நடமாட்டம் இல்லை. பல பத்து கிலோமீட்டர் தொலைவிலிருந்து உணவும் குடிநீரும் கொண்டு வர வேண்டியிருந்தது. உறைவிட வசதியில்லை காற்று வீசாத ஒரு இடத்தில் ஒரு பெரிய பள்ளம் தோண்டி, தரையில் புல்களை பரப்பி அதன் மீது வசித்தோம்" என்றார் அவர்.

1  2  3