• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-06 00:06:55    
சிங்கியாங் உற்பத்திப்படை

cri

பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததால், அங்கு சில நகரங்களும் தோன்றின. திங் சன் மலையின் அடிவாரத்தில் உள்ள Shihezi இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். 50 ஆண்டுகளுக்கு முன் பத்துக்கு மேலான குடும்பங்கள் மட்டுமே வசித்த ஒரு பண்டைய கிராமமாக இருந்தது. இப்போது, Shihezi நவீன நகரமாகியுள்ளது. கட்டிடங்கள் அங்குமிங்குமாக, நிற்கின்றன. வசதியான போக்குவரத்து உள்ளது. "சீன உறைவிட சுற்றுச்சூழல் பரிசு" இதற்குக் கிடைத்தது.

சிங்கியாங் உற்பத்திப் படையின் துவக்கக்காலத்தில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான அதிகாரிகளும் படைவீரர்களும் மட்டும் இருந்தனர். அப்போது, 24 லட்சம் வீரர்களைக் கொண்ட இப்படையில், 14 உற்பத்தி நிர்மாண டிவிஷன்களும் நாலாயிரத்துக்கும் அதிகமான தொழில் நிறுவனங்களும் இருக்கின்றன. சீன அரசின் விதிக்கிணங்க, சிங்கியாங் உற்பத்திப் படை, சீன அரசு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு சமூக அமைப்பாகும். சாகுபடி, எல்லை பாதுகாப்பு என, அரசு வழங்கிய கடமைக்கு அது பொறுப்பேற்கின்றது. நடுவண் அரசு, சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேச மக்கள் அரசு ஆகியவற்றின் இரட்டை தலைமைகளுக்குக் கீழ் செயல்படுகிறது. நிர்வாகத்தின் கீழுள்ள சாகுபடி இடத்தில், நாடு மற்றும் தன்னாட்சிப் பிரதேசத்தின் சட்டங்கள், சட்டவிதிகளின் படி, தானாகவே சொந்த நிர்வாக மற்றும் நீதி சட்ட அலுவலைக் கையாள்கின்றது.

சில ஆண்டுகளுக்கு முன், மேற்கு வளர்ச்சி என்ற நெடுநோக்கு திட்டம் நடைமுறைக்கு வந்த பின், அங்குள்ள கல்வி, அறிவியல் தொழில் நுட்ப, சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணி வலுவடைந்துள்ளது. 2003ம் ஆண்டு வரை, அதன் உற்பத்தி மதிப்பு 2600 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு 160 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.


1  2  3