• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-06 00:06:55    
பாலைவனச் சோலை

cri

சீனாவின் சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசம், நாட்டின் வடமேற்குப் பகுதியில் சிங்கியாங்கில் அமைந்துள்ளது. பாலைவனப் பரப்பளவு மிக அதிகமான பிரதேசம் இது. பாலைவனம், காற்று மற்றும் மணல் இங்கு வழக்கமாகக் காணப்படும். இயற்கை காட்சியாகும். 1949ம் ஆண்டு நவ சீனா நிறுவப்பட்ட பின், மரம் நடுதல், காடு வளர்த்தல் ஆகியவற்றின் மூலம், இத்தகைய நிலைமை மாறி விட்டது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில், மரம் நடுதல் மற்றும் காடு வளர்த்தல் பணி வலுப்பட்டு வருவதுடன், சிங்கியாங்கின் வனப் பரப்பு இடைவிடாமல் அதிகரித்துள்ளது. பாலைவனச் சோலையும் கூடுதலாகியுள்ளது. மக்களின் உறைவிட வசதி பெரிதும் மேம்பட்டுள்ளது.

சிங்கியாங், சீனாவில் நிலப்பரப்பு இந்த மாநிலமாகும். நாட்டின் பரப்பளவில் ஆறில் ஒரு பகுதியை அது வகிக்கின்றது. இருப்பினும், பயன்படுத்தப்படக்கூடிய நிலப்பரப்பு எல்லைக்குட்பட்டது. பெரும்பாலான பிரதேசம், பாலைவனமாகும். உலகில் இரண்டாவது பெரிய பாலைவனமான தாக்லமான் பாலைவனம், 3 லட்சத்து 30 ஆயிரம் சதுரகிலோமீட்டர் பரப்பளவுடையது. இது சிங்கியாங்கின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியாகும். ஆனால், சோலைவனப் பரப்பு 5 விழுக்காட்டுக்குட்பட்டது. சீனாவில் பாலைவனமயமாக்கம் மிகவும் கடுமையான பிரதேசம், சிங்கியாங்ஙாகும்.

1  2